Thursday, April 2, 2015

பாதி விருந்தில் போன யூதாசு

இன்று பெரிய வியாழன் மறையுரையில் மூன்றுவகை உறவுகள் பற்றிப் பேசினேன்:

1. பாத்திரத்தில் கையிடும் உறவு

2. பந்தியில் அமரும் உறவு

3. பாதம் கழுவும் உறவு

1. பாத்திரத்தில் கையிடும் உறவு

நீங்கள் ஒரு பாத்திரத்தில் கையிட வேண்டுமென்றால், அந்தப் பாத்திரத்தைப் பிடித்திருப்பவர் கை கீழ் இருக்கும். அதில் கையிடுபவரின் கை மேல் இருக்கும். 'மேல்-கீழ்' நோக்கி இருக்கக் கூடியது இந்த உறவு. இந்த உறவில் கீழ் இருப்பவர் வெறும் பொருளாக மட்டுமே பார்க்கப்படுகிறார். யூதாசு வகை உறவு இந்த உறவு.

2. பந்தியில் அமரும் உறவு

இந்த உறவில் ஒருவர் மற்றவரின் அருகில் சரிக்குச் சமமாக இருப்பார். ஒரே தளத்தில் இருக்கும் உறவு இந்த உறவு. இந்த உறவிற்கு எடுத்துக்காட்டு சீமோன் பேதுரு. இந்தவகை உறவில் சில சில மறுதலிப்புகள் இருந்தாலும், இறுதியில் நாம் கண்ணீர்விட்டுவிட்டால் மன்னிப்பும் கிடைக்கும்.

3. பாதம் கழுவும் உறவு

இந்த உறவில் 'கீழ்-மேல்' வரையறை இருக்கும். இந்த உறவு இயேசு வகை உறவு.

இந்த மூன்றாம் உறவிற்கு வர வேண்டுமென்றால் மூன்று நிபந்தனைகள்:

அ. பந்தியிலிருந்து எழ வேண்டும் - அதாவது, நம் பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியேற வேண்டும்.

ஆ. மேலாடையை அகற்ற வேண்டும் - அதாவது, நம் அடையாளம் என்று பிடித்திருக்கும் ஒன்றை நாம் விட வேண்டும்.

இ. துண்டைக் கட்டிக் கொண்டு முழந்தாளிட வேண்டும் - அடுத்தவரை ஆராதிக்கும் நிலைப்பாடுதான் இது.

பந்தியில் நாம் இயேசுவோடு நீண்ட நேரம் இருக்க வேண்டுமென்றாலும்,

எந்த உறவிலும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமென்றாலும்,

நமக்குத் தேவை இந்த மூன்றாம் வகை உறவே.

இல்லையா?

1 comment:

  1. சரியாகச்சொன்னீர்கள் தந்தையே! உறவுகளில் எல்லாம் சிறந்தது ...இந்த 'கீழ்- மேல்' உறவு என்பதை. நாம் எத்துணை பெரிய கொம்பனாக இருப்பினும் நம் நிலை மறந்து நம் உறவுக்குரியவரின் 'நிறைகளுக்காகவே' அவரிடம் கொள்ளும் உறவே காலம் கடந்தாக இருக்க முடியும்.'அடுத்தவரை ஆராதிக்கும் நிலைப்பாடு'....அழகான பதிவு. ஆம்..நாம் ஒருவரைத் தெண்டனிட்டு ஆராதிப்பினும், அல்லது அவரை மேல் நோக்கிப் பார்த்து ஆராதிப்பினும் இரண்டிலுமே நம் உறவு 'கீழ்- மேலாகத்'தான இருக்க முடியும். இத்தகைய 'உறவுகள்' போதுமே நம்மைப் புனிதப்படுத்த! ' இயேசுவோடு நாம் பந்தியிலிருக்க!'....

    ReplyDelete