Saturday, April 4, 2015

தீமையை நன்மையால் வெல்க!

தீமையை நன்மையால் வெல்க! -

இதுதான் புனித வெள்ளியின் மையம் என்று வத்திக்கான் பேராலயத்தில் மறையுரையாற்றினார் ஒரு அருட்தந்தை.

இயேசுவைக் கடவுளாக நினைத்துப் பார்க்காமல் ஒரு சாதாரண மனிதராக நினைத்துப் பார்த்தாலே எவ்வளவு ஆனந்தம்?

வாழ்வில் தனக்கு நடக்கும் நிகழ்வுகளையெல்லாம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திராணி பெற்ற ஒருவர் தான் இப்படி பெருந்தன்மையோடு நடக்க முடியும்.

இன்று மாலை நார்வேயில் புலம்பெயர்ந்த தமிழர்கள் நடுவில் பணிபுரியும் அருட்பணி. ரெஜினால்ட் அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோது ஒரு ஆங்கில மேற்கோள் சொன்னார்கள்:

"If You are Not Transformed...You will Transmit...!"

மன்னிப்பதோ, தியாகம் செய்வதோ, கருணை காட்டுவதோ ஒரு நாள் அல்லது ஒருதடவை நடக்கும் நிகழ்வு அல்ல. இது தொடர் நிகழ்வாக, நம்மிடமிருந்து பிரிக்க முடியாத ஒரு பண்பாக அமைய வேண்டுமென்றால் உள்ளார்ந்த மாற்றம் அவசியம்.

இந்த மாற்றம் இல்லையென்றால் நம் கசப்பான அனுபவங்களையும் நாம் அடுத்தவர் மேல் திருப்பிவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இயேசு கொண்டிருந்த மனநிலை நமக்கும் இருந்தால் எவ்வளவு நலம்!

1 comment:

  1. "தீமையை நன்மையால் வெல்க".... இதைச்சொல்வதில் உள்ள எளிமை செயலிலும் இருந்தால் எத்துணை நலமாயிருக்கும்! தன்னிடமுள்ள தீமையை ஒத்துக்கொள்ளும் ஒருவனால் மட்டுமே அதிலிருந்து வெளியேற முடியும்.இலையெனில் தந்தையின் கூற்றுப்படி நம் இயலாமையையும்,கசப்புணர்ச்சியையும் நம் எதிரிலிருப்பவரைப் பார்த்து திருப்பிவிடுவது வாடிக்கையாகிவிடும்.நம் தற்போதைய வாழும் முறையையே புரட்டிப்போடக்கூடிய ஒரு 'உள்ளார்ந்த மாற்றத்தை' 'உயிர்த்த கிறிஸ்து' விடம் வேண்டுவோமே!

    ReplyDelete