Wednesday, April 29, 2015

மௌனம் பேசும் மொழி

இந்த நாட்களில் லூக்கா நற்செய்தியாளர் எழுதிய பாடுகளின் வரலாறு பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். மற்ற நற்செய்தியாளர்களைவிட மிகவும் எளிமையும், புதுமையாகவும், நேர்த்தியாகவும் எழுதியிருக்கிறார் லூக்கா.

இதற்கிடையில் 'டியர் அன்ட் க்ளோரியஸ் ஃபிஸிசியன்' என்று லூக்கா நற்செய்தியாளரைப் பற்றிய புதினம் ஒன்று இருப்பதையும் நண்பர் ஜெகன் சொல்லி அறியப் பெற்றேன்.

அவரும் அதை நேற்று கொண்டுவர நான் விரித்தபோது என் கண்களில் பட்ட வார்த்தைகள் இவைதாம்:

'கடவுள் தன் அடியார்களை அவர்களின் பிறப்பின் போது அல்ல. பிறப்பிற்கு முன்பே தேர்ந்து கொள்கிறார்!'

புத்தகம் முழுவதையும் இந்த வாக்கியத்திற்குள் அடைத்துவிடலாம்.

'அந்த மனிதர் யார்?' என்று இயேசுவைப் பற்றியத் தேடலோடு தொடங்குகிறது லூக்காவின் பயணம். அவரின் குடும்பப் பிரச்சினை, படிப்பு, கல்வி, காதல் என அனைத்தையும் அலசுகிறது இந்த நூல்.

இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரல்லர் இவர். அப்படியிருக்க எதற்காக இயேசுவைத் தேடுகின்றார்? இந்தக் கேள்விக்கு விடையை இன்னும் நான் படிக்கவில்லை.

ஆனால், ஒன்று மட்டும் புரிகிறது.

'கடவுள் ஒன்றைத் தனக்குத்தான் என்று முடிவு செய்துவிட்டால், அதை எப்படியும் அடைந்துவிடுவார். என்ன விலை கொடுத்தாவது அதைத் தன்னோடு வைத்துக்கொள்வார்!'

பேசாமலே பேசுகிறார் இந்த லூக்கா.

2 comments:

  1. மிகச்சுருக்கமான ஆனால் மிக மிக நேர்த்தியான பதிவு இன்றையது.நம் தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே நம்மை அவர் கண்டெடுத்தால் தான் இத்துணை நேர்மையாக, மேன்மையாகப் படைக்கப்பட்டிருக்கிறோம்.தந்தையே! 100% நானும் தங்களோடு இணைந்து சொல்கிறேன்...ஆம்..."கடவுள் ஒன்றைத்தனக்குத்தான் என்று முடிவு செய்துவிட்டால்,அதை எப்படியும் அடைந்துவிடுவார்.என்ன விலை கொடுத்தாவது தன்னோடு வைத்துக்கொள்வார்!".... நான் அனுபவித்துப் புரிந்து கொண்ட உண்மை. அழகான வார்த்தைகள்! பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  2. Anonymous4/29/2015

    Good Yesu. How do you do? Take care of your health. At this summer its raining here for a week. people are happy...

    ReplyDelete