Sunday, March 17, 2019

இரக்கமுள்ளவர்களாக

இன்றைய (18 மார்ச் 2019) நற்செய்தி (லூக் 6:36-38)

இரக்கமுள்ளவர்களாக

மத்தேயு நற்செய்தியில், 'உங்கள் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள்' என்று இயேசு மலைப்பொழிவில் சொல்வதை, லூக்கா, 'உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள்' என்று பதிவு செய்கிறார்.

மத்தேயுவின் வார்த்தைகளைவிட லூக்காவின் வார்த்தைகள் ரொம்ப ப்ராக்டிகலாக இருக்கின்றன.

இரக்கமாய் இருங்கள் என்று சொல்வதைவிட, 'இரக்கமாகவே இருங்கள்' என்று சொல்வதுபோல இருக்கிறது.

கடவுளின் இரக்கமாக இருக்கிறார். அதே போல நீங்களும் இரக்கமாக இருங்கள்.

'நான் சிறிய வயதாக இருக்கும்போது அறிவாளிகளை அதிகம் விரும்பினேன். ஆனால், எனக்கு வயது கூடக்கூட இரக்கமுள்ளவர்களையே அதிகம் விரும்புகிறேன்' என்கிறார் ஆங்கிலக் கவிஞர் ஒருவர்.

இரக்கம் என்ற வார்த்தையை அடிநாதமாக வைத்துக்கொண்டு வாழ அழைக்கிறார் இயேசு.

இரக்கம் என்றவுடன் வழக்கமாக நாம் தவக்காலத்தில் செய்யும் தன்னிரக்கம் அல்லது கழிவிரக்கம் அல்லது சுயஇரக்கம் என்று நினைப்பது தவறு. தன்னிரக்கம் பல நேரங்களில் நம்மை நம்முடைய கடந்தகாலக் காயங்களோடு கட்டிவிடும். ஆனால், பிறர்மேல் காட்டும் இரக்கம் நம் அளவைகளையும் பெரிதாக்கும்.
எதையும் யாரையும் தீர்ப்பிட வேண்டாம் என்கிறார் இயேசு.

இதையே ஜே.கே. என அழைக்கப்படும் ஜித்து கிறிஷ்ணமூர்த்தி, 'observation without evaluation is the highest form of intelligence' என்கிறார். அதாவது, தீர்ப்பிடாத பார்வை நம் மனத்தின் மகிழ்ச்சியைக் கூட்டும்.

ஆக, இரண்டு விடயங்கள்:

அ. இரக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்வது

ஆ. இருப்பதை இருப்பதுபோல அப்படியே பார்ப்பது - எந்தவொரு evaluation இன்றி.

1 comment:

  1. "இரக்கமாய் இருங்கள்" என்று சொல்வதை விட ""இரக்கமாகவே இருங்கள்".... எத்தனை அழகாக இருக்கிறது! இதை ஏன் சிந்திக்காமல் போனோம்?நம்மைக் கடந்த காலக் காயங்களோடு கட்டிப்போடும் சுய இரக்கம் போல் அல்லாமல்,பிறர் மேல் காட்டும் இரக்கம் நம் அளவைகளைப் பெரிதாக்கும் என்கிறார் தந்தை.ஒருவரையோ அவரது செயலையோ ....எந்த ஒரு தீர்ப்புமின்றி... இருப்பதை இருப்பது போலவே பார்ப்பது நம் மகிழ்ச்சியைக் கூட்டுமெனில்.... இரக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்வதும்,நம்முடைய தீர்ப்பைக் கலக்காமல் இருப்பதை இருப்பது போலவே பார்ப்பதும் நமக்கு சுலபமாகத் தானே இருக்க வேண்டும்!கொஞ்சம் கடினமான விஷயம் தான்...ஆயினும் " இரக்கத்தை" அடிநாதமெனக் கொண்டு வாழ்ந்த இயேசு நம்முடன் இருக்கையில் எதுவுமே எளிதே! இனிதே! எனக்கூறும் தந்தைக்கு என் நன்றிகள்!!! இந்த வாரம் நமக்கு இரக்கத்தை அள்ளிக் தரும் வாரமாக அமைய வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete