Friday, March 15, 2019

உயர்வுள்ளல்

இன்றைய (16 மார்ச் 2019) நற்செய்தி (மத் 5:43-48)

உயர்வுள்ளல்

'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்,' 'வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது யர்வு' என்பவை பொய்யாப் புலவரின் மொழிகள்.

'வானத்தைக் குறி வை. நட்சத்திரத்தையாவது நீ அடைவாய்' என்பது ஆங்கிலப் பழமொழி.

ஆக, இலக்கு நிர்ணயிக்கும்போதே அது உயர்ந்த இலக்காக இருக்க வேண்டும்.

சொந்த வீடு வேண்டும் என்று இலக்கு நிர்ணயிப்பவர் ஒரு சிறிய வீட்டைப் பற்றி எண்ணாமல், பெரிய பண்ணைவுPடு போன்ற ஒன்றைக் கற்பனை செய்ய வேண்டும். கற்பனை செய்வதில் ஏன் கஞ்சத்தனம்? 5 ஏக்கர் வேண்டும் என்பதற்குப் பதிலாக 500 ஏக்கர் என்று கனவு கண்டால் நல்லதுதானே!

இன்று இயேசு தன் மலைப்பொழிவில் சீடர்களின் இலக்காக 'விண்ணகத் தந்தையை' வைக்கிறார். அதாவது, 'நீங்க ஏன் சாதாரண மனிதர்கள் போல, அல்லது பிற இனத்தவர் போல இருக்கிறீர்கள். நீங்க கடவுளைப் போல இருங்க!' என்கிறார்.

கடவுளைப் போல பரந்த உள்ளம், அவரைப் போன்ற பாரபட்சமற்ற நிலை, அவரைப் போன்ற தாராள மனம் - இவை எல்லாம் இருந்தால் நாம் பலவற்றைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. குறிப்பாக, நம்மால் மாற்ற இயலாது பற்றி நாம் கவலைப்படமாட்டோம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். இச 26:16-19), இஸ்ரயேல் மக்களின் அடையாளத்தை நிர்ணயிக்கிறார் மோசே: 'உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய்!'

ஆக, நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலைக்குத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அரச மகனாகப் பிறந்த ஒருவன் அரச நிலையைப் பற்றி எண்ண வேண்டுமே தவிர, ஆண்டி நிலையைப் பற்றி எண்ணக்கூடாது.

இவ்வாறாக, உயர்ந்த இலக்கு, தகுதிக்கேற்ற நடத்தை, பரந்த உள்ளம், பாரபட்சம் காட்டாத மனம் இருந்தால் நாம் பேறுபெற்றவர்களே!

1 comment:

  1. "நாம் விண்ணகத்தந்தையைப் போல் மாற வேண்டும்"என்பது இயேசுவின் இலக்கு."அரச மகனுக்கீடாகப் பிறந்த நாம் ஆண்டியாக நினைக்கக் கூடாது"...இது தந்தை யேசுவின் இலக்கு. இந்த இலக்கை அடைபவர்களே தகுதிக்கேற்ற நடத்தை,பரந்த உள்ளம்,பாரபட்சம் காட்டாத மனம் இவற்றுக்குச் சொந்தக் காரர்கள் ஆகலாம்" என்கிறது இன்றைய பதிவு. ஒரு மீன் ஜாடிக்குள் சிக்கிய சிறியமீனே அதை விட்டு உயரங்கள் தாண்டுகையில், உயரே பறக்கப் பிறந்த நாம் அதைச்செய்ய மாட்டோமா என்ன? ஆம் ...காசா...பணமா...கனவிலாவது நாம் ஐந்து ஏக்கரை ஐம்பதெனப் பார்ப்போமே....
    "உள்ளுவதெல்லாம் உயர்வானதாக இருக்கட்டும்"என்று ஆரம்ப மணியடிக்கும் தந்தையை வாழ்த்துகிறேன்!!!

    ReplyDelete