Tuesday, October 23, 2018

எஜமானனே

நாளைய (24 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 12:39-48)

எஜமானனே

நானும் என் நண்பர் அருள்திரு. அகஸ்டினும் அடிக்கடி சேர்ந்து இரசிக்கும் ஒரு பாடல், 'எஜமானனே' என்பது. அருள்திரு. பெர்க்மான்ஸ் அவர்கள் எழுதி இசையமைத்த 'எஜமானனே' என்ற இந்தப் பாடலில், அவர் தரும் முன்னுரையில், 'தம் ஊழியருக்கு வேளா வேளைக்கு படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்?' என்று கேட்டு, அந்தப் பொறுப்பாளர் தான் எனக் குறிப்பிடுவார்.

'பொறுப்பாளர்' - அருள்பணியாளர்களுக்கு இது ஒரு நல்ல உருவகம் என நினைக்கிறேன்.

முதலில் இந்த உருவகத்தைப் புரிந்துகொள்வோம்.

இன்று மேலான்மையியலில் அதிகம் பேசப்படும் ஒரு வார்த்தை 'திறன்'. ஆனால், இந்தத் திறன் வருவதற்கு முன், 'மதிப்பீடு,' 'அறிவு' என்ற இரண்டு அவசியம்.

மேற்காணும் சொற்றொடரில், 'நம்பிக்கைக்கு உரியவர்' என்பது மதிப்பீடு. 'அறிவாளி' என்பது 'அறிவு.' இந்த இரண்டும் இணையும்போது, 'பொறுப்பாளர்' என்ற ஒரு திறன் பிறக்கிறது. மதிப்பீடும், அறிவும் இருந்தால் மட்டும் போதாது. இந்த இரண்டையும் வெளிப்படுத்தும் திறன் இருந்தால்தான் அவை இருப்பதால் பலனுண்டு.

இன்று அருள்பணியாளர் நிலையில் சோர்வு அல்லது விரக்தி வரக் காரணம், அருள்பணியாளர் தலைவராக இருக்க நினைப்பதுதான். ஆனால், 'பொறுப்பாளர்' நிலையில் இருந்தால் சோர்வும், விரக்தியும் வராது. மாறாக, சுறுசுறுப்பும், ஆர்வமும், விடாமுயற்சியும்தான் இருக்கும். ஆகையால்தான், அருள்திரு. பெர்க்மான்ஸ் அவர்கள் தன்னை 'பொறுப்பாளரோடு' இணைத்துப் பார்க்கிறார்.

இந்தப் பொறுப்பாளரின் வேலை என்ன?

'ஊழியருக்கு வேளா வேளைக்குப் படி அளக்க வேண்டும்'

ஊழியவர்கள் தலைவரின் ஊழியர்களே அன்றி, பொறுப்பாளரின் ஊழியர்கள் அல்ல. ஆகவே, பணித்தளத்தில் என்னால் பயன்பெறுபவர்கள் என் ஊழியர்கள் அல்ல. மாறாக, அவர்கள் இறைவனின் ஊழியர்கள். இந்த நிலையில் நான் அணுகும்போது எல்லாரையும் மதிப்புடனும், பக்தியுடனும் நடத்துவேன். மேலும், யார்மேலும் அளவுக்கு மீறிய உரிமையும், உரிமைமீறலும் கொள்ளமாட்டேன்.

மேலும், இப்பொறுப்பாளரைப் பொறுத்தே அந்த வீட்டின் இருப்புநிலையும், இயங்குநிலையும் இருக்கும். ஆக, இவரின் பொறுப்புணர்வு இன்னும் அவசியமானதொன்றாக இருக்கிறது.

இறுதியாக, 'மிகுதியாக கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும், மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் மிகுதியாக கேட்கப்படும்' என்கிறார் இயேசு. ஆக,பொறுப்பாளர் இருப்பதை பயன்படுத்துவதோடு, இருப்பதை வைத்து இன்னும் அதிகமாக பெருக்க வேண்டும்.

இவ்வுருவகத்தை நாம் தனிப்பட்ட உறவு அல்லது வேலை வாழ்வில் பார்த்தால், வாழ்வு என்ற கொடைக்கு நாம் பொறுப்பாளர்களே தவிர, உரிமையாளர்கள் அல்லர். ஆக, அந்த நிலையில் நாம் வாழ்வை இனிமையாகவும், முழுமையாகவும் வாழ இன்று அழைக்கப்படுகிறோம்.

இதைத்தான் நாளைய முதல் வாசகத்தில் (காண். எபே 3:2-12) தூய பவுலும், 'உங்கள் நலுனுக்காகக் கடவுளின் அருளால் எனக்களிக்கப்பட்டுள்ள பொறுப்பைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்கள்' எனத் தன்னை ஒரு பொறுப்பாளராக அடையாளப்படுத்துகிறார்.

To listen to the Song 'Ejamanane' please click the following link:

Ejamanane Rev. Fr. J. Berchmans

5 comments:

  1. நாம் பார்த்திருப்போம்...மதிப்பீடும்,அறிவும் அளவிற்கதிகமாக இருந்தும் அதை வெளிப்படுத்த இயலாத காரணத்தினாலேயே பலரின் வாழ்வில் "சோர்வு" எனும் ஆமை புகுந்து விடுகிறது.இது ஒரு அருட்பணியாளரின் வாழ்வில் இன்னும் மோசமாக பிரதிபலிக்க வாய்ப்புள்ளது.இன்று தந்தை பெர்க்மான்ஸ் தான் பரிமளிக்கிறாரெனில் அவருக்கு இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கும் வாய்ப்புக்களே! அதை அவர் வெளிப்படுத்தும் 'திறனும்' ஒரு காரணம்.ஒவ்வொரு அருட்பணியாளரும் ஒரு பொறுப்பாளரே! எவர் ஒருவர் தன்னை ஒரு ஊழியரின் நிலையில் வைத்துப்பார்க்கிறாரோ, அவரே தனக்குக் கொடுக்கப்பட்ட வாழ்வை ஒரு கொடையாக எண்ணி அதை இனிமையாகவும்,முழுமையாகவும் வாழ்த் தகுதி பெற்றவர்.....ஓங்கி ஒலிக்கிறார் தந்தை.

    இப்பொழுதெல்லாம் தந்தை தனது பதிவுகளில் தன்னையே முன்னிறுத்தி( First person) தனது எழுத்துக்கு "தானே முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுவேன்" எனும் தொனியில் பேசுவது அவரது எழுத்தில் அவருக்குள்ள convictionஐக் காட்டுகிறது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் " எஜமான்னே" கேட்டேன்.30 வயது தன்னை மட்டுமே முன்னிறுத்தி வாழ்ந்ததால் அவர் தான் இழந்ததையும்,அதற்குப்பின் " இயேசு" வை முன்னிறுத்தி வாழ்ந்ததால் தான் பெற்றதையும் உரைநடையாகவும்,பாடலாகவும் அழகாக விவரிக்கிறார்.அவரையும்,அவரது பாடலை வெளிக்கொணர்ந்த தந்தையையும் இறைவன் தன் " பொறுப்பாளர்களாக" ஏற்று வழிநடத்துவாராக!

    ReplyDelete
  3. Time---symbol...wonderful....
    I ask myself" Do I live my life everyday expecting the Lord?"
    "Lord help me to break through unhealthy bonds!"
    Thank you Reverend Yesu for helping us relish daily Gospel reading.
    You do make our thoughts expand..

    ReplyDelete
  4. GRAZIE per il canto e riflessione. Complimenti.

    ReplyDelete
  5. Nice to read the Italian comment தம்பி

    ReplyDelete