Wednesday, November 30, 2016

இரு வீடுகள்

நாளைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 7:21,24-27) 'இரு வீடுகள்' உருவகத்தைப் பதிவு செய்கின்றார்.

இறைவார்த்தையைக் கேட்டு நடப்பவர்கள் பாறைமேல் கட்டப்பட்ட வீடுகள் என்றும்,

அதைக் கேட்டு நடக்காதவர்கள் மணல்மேல் கட்டப்பட்ட வீடுகள் என்றும் சொல்கின்றார்.

எதன்மேல் வீடு கட்டுவது எளிது?

மணல்மேலா? அல்லது பாறைமேலா?

மணல்மேல்தான்.

ஏனெனில் வானம் தோண்டுவது எளிதாகவும், கற்களை அடுக்கி அடித்தளம் போடுவது எளிதாகவும் இருக்கும். வீடு கட்டுவதற்கு சாரம் கட்டுவதற்கு கம்புகளை நடுவதற்குக் கூட எளிதாக இருக்கும்.

ஆனால், பாறைகள் அதிகம் உள்ள இடத்தில் வேலை மிக மெதுவாக நடக்கும். வானம் தோண்டுவது கடினமாக இருக்கும். அப்படியே பாறைகளை வெடி வைத்து தகர்க்க நினைத்தாலும் அது தன்போக்கில் வெடித்துச் சிதறும். பாறைகள்மேல் அடித்தளம் இடுவதும் கடினம். ஏனெனில் கற்கள் பாறைகளின்மேல் நிற்காது. வீடு கட்டுவதற்கு சாரம் கட்டுவதும் கடினம். சாரம் சரியாகக் கட்டாமல் மேலே நிற்பது பாதுகாப்பும் இல்லை.

கடினமாக இருக்கிறது என்பதற்காக அதைக் கைவிட்டுவிட்டு எளிதாக உள்ள மணலைத் தேர்ந்துகொண்டோம் என்றால், இன்று வேண்டுமானால் அது நன்றாக இருக்கும். ஆனால், காலப்போக்கில் அது பலம் அல்லது பலன் தராது.

ஆக, எளிதாக இருப்பதும், வேகமாக நடப்பதும் என்றும் பாதுகாப்பானது அல்ல.

நேற்று மாலை வாக்கிங் போகும்போது எங்களைக் கடந்த போன ஒரு இளவலின் கைப்பையில், 'குட் திங்ஸ் டேக் டைம்' என எழுதியிருந்ததன் பொருள் எனக்கு இன்று தெரிகிறது.

இறைவார்த்தையைக் கேட்பது என்பது எளிமையான வழியைத் தேர்ந்தெடுப்பது அல்ல. மாறாக, கடினமான, அதிகம் முயற்சி தேவைப்படுகின்ற வழியைத் தேர்ந்தெடுப்பது.

நாம் கட்டும் வீடு எந்த வீடு?

5 comments:

  1. ஒரு வித்தியாசமான பதிவு.எதன் மேல் வீடு கட்டுவது? யார் உயர்ந்தவர் மணல் மேல் வீடு கட்டுபவரா இல்லை பாறை மேல் கட்டுபவரா? முதலாமவர் தான் புத்திசாலி என்பது போல் தன் வோட்டை மணல் மேல் வீடு கட்டுபவருக்குப் போடுவது போல் ஒரு பாவ்லா காட்டி இல்லை...இல்லை பாறை மீது வீடு கட்டுவதுதான் புத்திசாலித்தனம் என்று முடித்திருக்கிறார் தந்தை.இறை வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பதுதான் புத்திசாலித்தனம் எனில் நாமும் அப்படி ஒரு புத்திசாலியாக இருப்பதில் என்ன சங்கடம்? யோசிக்க வைக்க மட்டுமல்ல..அதன் படி நடக்கவும் நம்மைத்தூண்டும் ஒரு பதிவு." குட் திங்ஸ் டேக் டைம்" என்பதைத் தந்தைக்கு யாரும் சொல்லித்தான் புரியவைக்க வேண்டுமா என்ன? என்னே ஒரு தாழ்ச்சி! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Anonymous12/01/2016

    Good Morning yesu. How are you? Have a nice day. God bless us. Take care.

    ReplyDelete
  3. 'பாறை மேல் ' அப்படின்னு சொன்னா ஏன் மலையை நினைக்கிறோம்? மண்ணை ரொம்ப ஆழம் தோண்டினா பாறை வரும். அங்கேருந்து அஸ்திவாரம் போட்டா , பில்டிங்கும் ஸ்ட்ராங் .பேஸ்மென்டும் ஸ்ட்ராங் . எப்படி என் ஐடியா, சாமி?

    ReplyDelete
  4. நல்ல idea அறிவாளி Catherine...🤔

    ReplyDelete