Saturday, November 5, 2016

தேவையானது ஒன்றே!

இலத்தீன் மொழியில் 'unum necessarium' என்ற சொல்லாடல் உண்டு.

மார்த்தா-மரியா வீட்டில் இயேசு இருந்த போது, 'ஆனால், தேவையானது ஒன்றே. மரியா நல்ல பங்கை தேர்ந்து கொண்டார்' என்கிறார்.

அந்தத் தேவையானது ஒன்றைத் தெரிந்து கொள்வது தான் இலத்தீன் சொல்லாடலின் பொருள்.

இன்று நம் வாழ்வின் உள் ஓட்டத்தை ஒரு நிமிடம் உட்கார்ந்து ஆராய்ந்தால், அதில் நிறையவற்றை நாம் காணலாம்:

'தேவையானது'

'தேவையற்றது'

'தேவைப்படலாம் என நினைப்பது'

'பின் தேவைப்படலாம் என நினைப்பது'

'தேவையில்லை ஆனாலும் இருக்கலாம் என நினைப்பது'

'தேவையில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது'

இப்படி நிறைய இருக்கலாம்...

வாழ்க்கை சில நேரங்களில் நிறைய ப்ரொஜக்டரில் இருந்து மொத்தமாக வரும் படத்திரள் போல இருக்கின்றது.

நிறையவற்றிலிருந்து சிலவற்றிற்கு,

சிலவற்றிலிருந்து ஒன்றிக்கு

என வாழ்க்கை ஒன்றில் குவிந்தால்

அதுவே தேவையானது!

1 comment:

  1. சரியாய்ச் சொன்னீர்கள்....பல நேரங்களில் நான் வீட்டில் தேவையற்றவைகளை அகற்றும் முயற்சியில் இறங்குவேன்.ஒவ்வொரு பொருளையும் பார்க்கையில் நாளை இது ஒருவேளை தேவைப்பட்டால்?! எனும் எண்ணம் மேலோங்கி கடைசியில் மிகமிகச் சிலவற்றைத்தவிர மற்ற எல்லாமே இடம்தான் பெயர்ந்திருக்குமே தவிர வீட்டைவிட்டு வெளியேறியிருக்காது.வாழ்க்கையில் சில விஷயங்கள் நம்மைப் பசை கொண்டு ஒட்ட வைத்திருப்பது உண்மைதான்.தேவையானவற்றிலிருந்து தேவையற்றவைகளைப் பிரித்தெறிய ஒரு 'அன்னப்பறவை'யின் மனம் வேண்டும். "வாழ்க்கை நமக்குத்தரும் நிறையவற்றிலிருந்து சிலவற்றிற்கு,சிலவற்றிலிருந்து ஒன்றுக்கு,என வாழ்க்கை ஒன்றில் குவிந்தால்..அதுவே தேவையானது.".... தந்தையின் வார்த்தைகள் மேலோட்டமாக இருப்பினும் அவை ஆழமான கருத்தை உள்ளடக்கியவை.ஆனால் அதைக் கருத்தில் கொண்டு கடைபிடிக்க ஒரு துறவியின் 'பற்றற்ற' மனம் வேண்டும். இந்த வாரத்தில் நமக்குத் தேவையற்ற..ஆனால் பிறருக்குத் தேவையான நம்மிடமுள்ள சிலபொருட்களை நம்மிடமிருந்து பிரிந்து செல்ல அனுமதிப்போமே! வாழ்க்கையின் சாதாரண விஷயங்களை அசாதாரண முறையில் எடுத்துச் சொல்லும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்! அனைவருக்கும் இந்த வாரம் இனிய வாரமாக அமையட்டும்!!!

    ReplyDelete