Friday, November 4, 2016

பயிற்சி

'என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்.'

(காண். பிலி 4:10-19)

தூய பவுல் தன் மனநிறைவு பற்றி பிலிப்பியருக்குச் சொல்லும் விதம் ஆச்சர்யமாக இருக்கிறது.
'எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும். வளமையிலும் வாழத் தெரியும்.
வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ,
நிறைவோ, குறைவோ
எதிலும், எந்தச் சூழலிலும் வாழ பயிற்சி பெற்றிருக்கிறேன்!'

'எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு!'

இந்த இரண்டு எழுத்துக்களையும் அருகருகே வைத்துப் பார்ப்போம்.

முதலில், மனநிறைவுடன் வாழ்வது ஒரு பயிற்சி.

அதாவது, எழுத்து, ஓவியம், கலை, இசை போல மனநிறைவும் ஒரு பயிற்சி.

யாருக்கு மனநிறைவு வரும்?

அதாவது, என் அடையாளம் எனக்கு வெளியிலிருந்து வருவதில்லை என நினைத்தால் மனநிறைவு தானே வந்துவிடும். இல்லையா?

இரண்டாவது, இறைவன் தரும் வல்லமையின்மேல் நம்பிக்கை.

இந்த இரண்டும் நமக்கு இருந்தால் எத்துணை நலம்!

1 comment:

  1. இந்தப் பதிவைத் திறந்தவுடன் என் கண்ணில் பட்ட, தூய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய ஆரம்ப வரிகள் எனக்கென்றே அனுப்பப்பட்டதைப் போன்ற ஒரு உணர்வைக் கொடுத்தது.தந்தைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.வெளியே நின்று பார்க்கையில் பசியும்,பட்டினியும்,வறுமையும் வேண்டாத விஷயமாய்த் தெரியலாம்.ஆனால் ஒருமுறை அதைக்கடந்தவருக்குப் பின்னால் திரும்பிப் பார்க்கையில் தான் எப்பேர்ப்பட்ட அனுபவத்தைக் கடந்து வந்துள்ளோம் என்பது புரியும்.அதுவே பின் ' மன நிறைவாகவும்' மாற வாய்ப்புண்டு.இந்த மன நிறைவோடு ' இறைவனின் வல்லமை மீது நாம் வைக்கும் நம்பிக்கையும் கைகோர்க்கும் போது நம்மை யாரால் அசைக்க முடியும்? நம்பிக்கையூட்டும் நல்ல வார்த்தைகளால் எம்மை மனநிறைவுக்கு இட்டுச்செல்லும் தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete