Thursday, December 1, 2016

பார்வை

பார்வையற்ற இருவர் அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர்.
(காண். மத் 9:27-31)

இயேசு பார்வையற்ற இருவருக்கு பார்வை தருகின்றார்.

இயேசு தனது வீடு வந்து சேர்ந்தபோது அவர்களும் வந்தனர் எனப் பதிவு செய்கின்றார் மத்தேயு.

இயேசுவின் வீட்டிற்கு அந்தப் பார்வையாளர்களை அழைத்துச் சென்றது யார்?

இயேசுவே அழைத்துச் சென்றாரா?

அல்லது ஏதோ ஒரு நல்ல உள்ளம் அழைத்துச் சென்றதா?

கண் தெரியாத ஒருவரின் கைகளைப் பிடித்து நடந்திருக்கிறீர்களா?

நான் ஒருமுறை நடந்திருக்கிறேன்.

அவரை விட எனக்குத்தான் பயம் அதிகமாக இருந்தது அன்று.

பார்வையற்றவர்களை அழைத்து வந்தவர்களைப் பார்த்த பார்வையற்றவர் என்ன சொல்லியிருப்பார்?

'நன்றி' மட்டுமா?

இல்லை.

ஒளியாம் கிறிஸ்துவிடம் அழைத்து வந்த அவர் அவர்களுக்கு ஒளி பெற்றுத் தருகின்றார்.

'ஆண்டவரே என் ஒளி. அவரே என் மீட்பு' என்கிறார் திபா ஆசிரியர் (27:1).

நாமும் மற்றவர்களை இயேசுவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றால் எத்துணை நலம்!

2 comments:

  1. " காலுக்குச் செருப்பில்லை எனப் புழுங்கினேன்....காலே இல்லாதவரைப் பார்க்கும் வரை"... கேள்விப்பட்டிருப்போம் இந்த சொலவடையை.இரு விழிகளும் பார்க்கும் நிலையில் உள்ள நாம் பார்வையற்றவரைப்பற்றி சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? எங்கள் கோவிலில் தினம் திருப்பலிக்கு ஒரு பார்வையற்றவர் பல வருடங்களாக வந்துகொண்டிருக்கிறார்." தன்னம்பிக்கை".. இது அவரின் தாரக மந்திரம்.தான் வாழ்ந்த காலத்தில் பலருக்குப் பார்வையளித்த இயேசு ஏன் இவருக்கு ஒரு புதுமையை நிகழ்த்தக்கூடாது என நான் அடிக்கடி நினைத்ததுண்டு.நம்மில் புற ஒளி பெற்ற பலர் அக ஒளியை இழந்து நிற்பவர்களை இனம் கண்டு அவர்களை இயேசுவின் வீட்டிற்கு அழைத்துச்சென்றால் எத்துணை நலம்! எனத் தந்தையோடும்,திருப்பாடல் ஆசிரியரோடும் இணைந்து சொல்வோம்." எளியோராகிய நம் நெஞ்சங்களில் வந்த ஒளியாம் இறைவன்" நம்மில் அடுத்திருப்பவரின் நெஞ்சங்களிலும் வர வேண்டுவோம். நல்லதொரு பதிவிற்காகத் தந்தையை இறைவன் ஆசீர்வதிப்பாராக!

    ReplyDelete
  2. GITA - New York

    Matthew's Gospel speaks of Jesus' "home".

    Just thinking:

    a] Did Jesus have a residence, own a house of his own with title, sort of Parish Priests having their own quarters and Archbishops their headquarters.
    Quite intriguing to me...

    b] Did these men [who denies they were women?] receive sight upon arrival at J's home?
    May be - even today - J's home, that is the GREATER CHURCH, is the best EYE CLINIC for those who have vision impediments.
    Jesus as the Divine Ophthalmologist fascinates me.

    ReplyDelete