Thursday, November 17, 2016

தேனைப் போல்

'அது என் வாயில் தேனைப் போல் இனித்தது.
ஆனால், அதைத் தின்றபொழுது என் வயிற்றில் கசந்தது.'
(காண். திவெ 10:8-11)

ஆண்டவரின் ஏட்டுச்சுருளை திண்ணுமாறு பணிக்கப்படுகின்றார் யோவான்.

அது எப்படிங்க சுருளை திங்க முடியும்?

பேப்பரை சாப்பிட முடியுமா?

இங்தான் ஒரு சிம்பலிசம் பயன்படுத்தப்பட்டுள்ளது:

வாய் என்பது நாம் பேசும் வார்த்தைகளின் பிறப்பிடம்.

ஆனால், வயிறு என்பது யூத மரபில் உணர்வுகளின் பிறப்பிடம்.

அதாவது, நான் உங்களைப் பார்த்து, 'ஐ லவ் யு' என்று சொல்கிறேன் என வைத்துக்கொள்வோம்.

இந்த வார்த்தைகளின் பிறப்பிடம் வாய்.

ஆனால், அன்பு என்ற உணர்வின் பிறப்பிடம் வயிறு.

பல நேரங்களில் வாயில் இனிப்பது வயிற்றில் கசக்கும்.

அதாவது, எல்லார்ட்டயும் ரொம்ப எளிதா 'ஐ லவ் யு' அப்படின்னு சொல்லிட முடியும்.

ஆனால், எல்லாரிடமும் ஒரே மாதிரி அன்பு உணர்வைக் காட்டும்போது, அல்லது காட்ட இயலாதபோது அது வயிற்றில் கசக்கிறது. அதாவது, அது உணர்வாக வர மறுக்கிறது.

நாளைய பதிலுரைப்பாடலில் (திபா 119) இறைவனின் திருச்சட்டம் இனிப்பதாக திருப்பாடல் ஆசிரியர் பாடுகின்றார்.

அந்த இனிமை உதட்டிலும், வயிற்றிலும் இருந்தால் நலமே.

2 comments:

  1. வயிறு என்பது யூதர்களுக்கு வேண்டுமானால் 'உணர்வுகளின்' பிறப்பிடமாயிருக்கலாம்.ஆனால் நாம் அதை எப்படி ஒத்துக்கொள்வது? வலி,எரிச்சல் போன்ற உணர்ச்சிகள் தான் வயிறினால் உணரப்பட முடியும்.ஆனால் ' அன்பு' போன்ற உணர்வு பிறக்குமிடம் 'மனம்'( இதயம்) அல்லவா? ஒரு பொருள் கசக்கிறது என்பதை அது நாக்கின் அடிப்பகுதியைத் தொட்டவுடனே தெரிந்து கொள்ளலாமே! அது வயிறைச் சென்றடையும் வரைக் காத்திருக்க வேண்டுமா என்ன? எது எப்படியோ....திருப்பாடல் ஆசிரியருடன் நாமும் சேர்ந்து " இறைவனின் திருச்சட்டத்தின் இனிமையை" நம் உதட்டிலும்,வயிற்றிலும் உணர முயற்சிப்போம்! இறைவன் நம் உணர்வுகளையும்,அவை பிறக்கும் உறுப்புக்களையும் ஆசீர்வதிப்பாராக!!!



















    ReplyDelete
  2. 3 மேலும் அவர் என்னை நோக்கி, "மானிடா! நான் உனக்குத் தருகின்ற இச்சுருளேட்டைத் தின்று உன் வயிற்றை நிரப்பு" என்றார். நானும் தின்றேன். அது என் வாயில் தேன்போல் இனித்தது.

    எசேக்கியல் 3

    பழைய ஏற்பாட்டிலயும் இது வருது சாமி

    ReplyDelete