Tuesday, November 15, 2016

தாலந்து

'உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்.

இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.'

(காண். லூக்கா 19:11-28)

நாளைய நற்செய்தியில் தாலந்து உவமை அல்லது மினா உவமையை நாம் வாசிக்கின்றோம்.

மேற்காணும் வார்த்தைகள் நம்ம மோடியின் வார்த்தைகள் போல இருக்கின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை இந்நேரம் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒட்டுமொத்த இந்தியாவின் தூக்கத்தையும் கெடுத்துவிட்டார்.

கறுப்பு பணத்தை அழிக்க தான் எடுத்த முயற்சி அப்படி இப்படி என பில்ட் அப் கொடுத்தார்.

இந்த ஒருவாரத்தில் எந்த ஒரு கறுப்பு பண முதலையும் பிடிபடவில்லை.

கறுப்புப் பண முதலைகளை விட்டுவிட்டு, பாவம் கடுகுப்பெட்டிக்குள் கையை விட்டுவிட்டார்.

உள்ளவர் எவருக்கும் நிறைய கொடுக்கிறார்.

இல்லாதவரிடமிருந்து இருப்பதையும் எடுத்து ரோட்டில் நிற்க வைத்துவிட்டார்.

ஒரு மினா கொடுத்து பத்து மினா கொடுத்தவரை பாராட்டும் தாலந்து பிரபு என் கண்களுக்கு ஒரு முதலாளி போலவே தெரிகின்றார்.

1 comment:

  1. தந்தையின் இறுதி வரிகள் மிகச்சரியானவை." வைக்காததை எடுப்பவரும்,விதைக்காததை அறுப்பவருமான ஒருவர் எப்படி ஒரு இறைவனுக்கோ ஏன் ஒரு தந்தைக்கோ கூட ஈடாக முடியும்? இப்படிப்பட்ட முதலாளித்துவ குணம் படைத்தவர்களிடம் தான் இன்று நம் நாடும்,அதன் மக்களும் சிக்கித் தவிக்கின்றனர்.அந்நிய தேசங்களில் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியல் நம் பிரதமரின் கைகளிலிருந்தும் அவர் கறுப்புப் பண முதலைகளைத் தொடாமல் கடுகுப் பெட்டிக்குள்ளும்,ஏன் காலி டப்பாக்களுக்குள்ளும் கையை விட்டுள்ளார்." உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்" அட்சரம் பிசகாமல் விவிலியத்தை வாழ்ந்து காட்டுபவரில் நம் பிரதமருக்கு நிகர் பிரதமரே! விவிலய வரிகளும் கூடக் கேள்விக்குறியாவது இம்மாதிரி தருணங்களில் தான்.யாரிடம் விளக்கம் கேட்பது? தந்தை யேசுவுக்கே வெளிச்சம்!!!

    ReplyDelete