Wednesday, November 9, 2016

ஒனேசிமு

நாளைய முதல் வாசகத்தில் (காண். பிலமோன் 7-20) பவுல் பிலமோனுக்கு எழுதும் கடிதத்தை வாசிக்கிறோம்.

'பிலமோன்' என்றால் 'முத்தம்' அல்லது 'அன்பு' அல்லது 'நட்பு' என்று பொருள்.

பிலமோனின் ஒரு அடிமை அல்லது ஒரே அடிமையின் பெயர் ஒனேசிமு. ஒனேசிமு என்றால் பயன்படுபவன் என்பது பொருள். அடிமைகளுக்கு பெயர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அவன் என்ன செய்கிறானோ அதுவே அவனுக்கு பெயராகிவிடும். இந்த அன்பன் பயன்படுபவனாக இருந்ததால் ஒனேசிமு என பெயர் பெறுகிறான்.

பிலமோனுக்கு அடிமையாக இருந்த ஒனேசிமு ஓடிப்போய் பவுலோடு சேர்ந்து கொள்கிறான்.

அப்படி தன்னோடு சேர்ந்து கொண்ட ஒனேசிமுவை திரும்ப அவனின் தலைவரிடம் அனுப்புகிறார் பவுல்.

அப்படி அனுப்பும்போது ஒரு கடிதத்தை எழுதிக் கொடுத்து அனுப்புகிறார்.

அக்கால உரோமை சட்டப்படி அடிமை ஒருவன் தலைவனை விட்டு ஓடினால் அப்படி ஓடிய அடிமையும், அவனுக்கு அடைக்கலம் கொடுத்தவனும் ஒரே மாதிரி தண்டனை பெறுவர்.

ஆனால், தண்டனை அல்ல. மன்னிப்பே முன்னிறுத்தப்படவேண்டும் என்பது பவுலின் வேண்டுகோளாக இருக்கிறது.

இந்தக் கடிதத்தில் பவுலின் மூன்று குணங்கள் எனக்குப் பிடிக்கின்றன:

அ. பவுலின் தொடர்புகள் (contacts). 'எல்லாருக்கும் எல்லாம் ஆனேன்' என பெருமைப்படும் பவுல் அப்படித்தான் வாழ்ந்திருக்கிறார். தலைவருக்கு தலைவராக அடிமைக்கு அடிமையாக ஆணுக்கு ஆணாக பெண்ணுக்கு பெண்ணாக. இந்தக் காலத்தில் ஒருவரை முன்னேற்றிச் செல்வது அவரின் அறிவோ திறமையோ அல்ல. மாறாக, அவரின் தொடர்புகளே.

ஆ. பவுலின் பெருந்தன்மை. தன்னிடம் ஓடி வந்த அடிமையை பெருந்தன்மையோடு பார்த்ததோடல்லாமல், அப்படியே பார்க்குமாறு பிலமோனையும் அறிவுறுத்துகின்றார்.

இ. எப்படி ஒருவன் இருக்கிறான் என்பதை அல்ல, மாறாக, எப்படி ஒருவன் மாற முடியும் என்று பார்க்கும் உள்ளம் கொண்டவராக இருக்கின்றார். இவன் அடிமைதான். இவனுக்கு என்ன தெரியும்? என அவனைப் பயன்படுத்த நினைக்காமல், அவனை ஒரு நம்பிக்கையாளனாக, சகோதரனாக மாற்ற முடியும் என நினைக்கின்றார்.

ஆக, நாம் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி மாறுகிறோம் என்பதுதான் முக்கியம்.

இல்லையா?

4 comments:

  1. GITA - NEW YORK

    Thank you, Fr. Y. K. for your explaining the meanings of names as "Philemon" and "Onesimus".

    You say Philemon is "Kiss" - "Love" or "Friendship".
    If so, it's cute.

    [I would have loved that my parents registered me in the civil and ecclesiastical records with a name like, "KISS".
    How charming it would have been to go about, gloating with that name...flirting with everyone...]

    And the nameless slave, having become very useful, obtains a name, "Onesimus" is so meaningful.

    Perhaps I must earn a name - more than carrying a meaningless label or an empty tag!

    An absorbing inquiry...
    My name is, "GITA".

    Am I a song to the Lord?
    Am I a joy to my sisters and brothers?

    ReplyDelete
  2. அழகானது மட்டுமின்றி,என்னுள் பல மலரும் நினைவுகளை ஏற்படுத்திய ஒரு பதிவு.நான் பள்ளிச்சிறுமியாக இருந்தபோது என் விடுதிக் காப்பாளர் சகோதரி (வெள்ளைக்காரர்) என் பெயருக்கு 'அன்பு', ' நைட்டிங்கேல்' என்றெல்லாம் அர்த்தம் சொன்னார்.இன்று தந்தையின் பதிவைப்பார்க்கையில் என் பெயரின் ஆண்பால் தான் இந்த 'பிலமோன்' எனும் பெயரோ எனத்தோன்றுகிறது. (தவறெனில் கண்டுக்காதீங்க ஃபாதர்.!)" எல்லோருக்கும் எல்லாமாக.." எனும் சொற்றொடருக்கு இலக்கணமாக வாழ்ந்த தூய பவுல் தன்னிடம் வந்த ஒனேசிமு எனும் அடிமையைத் தன் 'இதயம்' எனக் குறிப்பிடுகிறார்.அவன் பிலமோனை விட்டு வந்தது துரோகமே எனினும் அவனுக்குத் தண்டனைக்குப்பதில் ' மன்னிப்பு' வழங்கச்சொல்கிறார்.அன்பைக்குறிப்பிட இதற்கு மேல் வார்த்தை இல்லை என்றே எண்ணுகிறேன். தந்தையின் வார்த்தைகள்...."நாம் எப்படி இருக்கிறோம் என்பதை விட எப்படி மாறுகிறோம் என்பதுதான் முக்கியம்்"... அருமை. இந்தப் பதிவு எனக்கு ஒரு விஷயத்தை உறுதி செய்கிறது."இறைவன் தன்னிடம் மிக நெருக்கமாக ஒட்டிக்கொண்டிருப்பவர்களை விட தனக்கெதிராக நின்று பின் தன்னிடம் வருபவர்களை இன்னும் அதிகமாக நேசிக்கிறார்" என்பதே அது.நமக்கு ஆறுதல் தரும் விஷயமல்லவா? நேற்று இரவு வாசித்தபோதும்,இன்று திருப்பலியில் கேட்டபோதும் எனக்குக் கிடைத்த மென்மையானதொரு உணர்வு இந்தப் பதிவைக் கண்டதும் இரட்டிப்பானது உண்மை. இந்த உணர்வையும், மற்றும் நான் ஒரு சிட்டாய்த்திரிந்த என் பள்ளிப்பருவத்தின் இனிய நினைவுகளையும் எனக்கு சாத்தியமாக்கிய தந்தைக்கு என் பாராட்டும்,நன்றியும்!!!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. GITA - NEW YORK

    Mrs. Philo's comment "இறைவன் தன்னிடம் மிக நெருக்கமாக ஒட்டிக்கொண்டிருப்பவர்களை விட தனக்கெதிராக நின்று பின் தன்னிடம் வருபவர்களை இன்னும் அதிகமாக நேசிக்கிறார்" as above brings to my mind a poignant image...
    I must submit I cannot write as good in Tamil as she can...

    And the image?
    It is of the estranged younger son who walks off, wastes his resources and then returns home repentant for the party! [Jesus' famous parable in Luke]

    The older one meanwhile who is always orthodox, righteous, pious, Pharisaic and traditional remains "lost" in the field...

    The "sinner" gets to enjoy the celebrations within and the "saint" stays stranded in the wilderness - drooling a volley of arguments and complaints, even as he stands arguing with his Father...

    ReplyDelete