Thursday, November 10, 2016

கோடு

'உம்முடைய உடன்பாடின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை.'

இன்றும் பிலமோன் - ஒனேசிமு - பவுல் கடிதத்தின் ஒரு வரியை எடுத்துக்கொள்வோம்.

'நீ உன்னையே எனக்கு கடனாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை நான் உனக்கு நினைவூட்டத் தேவையில்லை' என்று பிலமோனுக்குச் சொல்லும் பவுல், எதற்காக, 'உன் உடன்பாடினின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை' எனச் சொல்கிறார்?

அதாவது, பிலமோனின்மேல் தனக்கு உரிமை இருந்தாலும்,

அவரின் ஒனேசிமுவின்மேல் உரிமை இருந்தாலும்,

தன் கோட்டைத் தான் தாண்டக்கூடாது என்பதில் மிகவும் கருத்தாய் இருக்கிறார் பவுல்.

'கோடு தாண்டாமல் இருத்தல்' உறவில் மிக முக்கியமானது.

வார்த்தையில், செயலில் கோடு தாண்டுவதற்கு முன், முதலில் நாம் நம் எண்ணங்கள் வழியாகவே கோடு தாண்டுகிறோம்.

எண்ணத்தால்கூட கோடு தாண்டாமல் இருத்தல் எல்லா உறவுகளையும் இனிய உறவுகளாக வைக்கும்!

இல்லையா?

2 comments:

  1. நேற்றையப் பதிவின் நீட்சியாகத் தெரிகிறது இன்றையப் பதிவு.தூய பிலமோன் தூய பவுலிடமிருந்து பல உதவிகள் பெற்றிருப்பதும்,அதன் நிமித்தம் பிலமோன் அவருக்குக் காலமெல்லாம் கடன் பட்டவர் எனும் எண்ணத்தில் செயல்பட வேண்டும் என நினைப்பதும் அப்பட்டமாகத் தெரிகிறது தூய பவுல் பிலமோனுக்கு எழுதும் வரிகளில்.ஆனால் அதையும் மீறி அவர் மனத்தின் சில உண்மைகளும் எட்டிப்பார்க்கின்றன அந்த வரிகளில்.பிலமோன் பவுலிடமிருந்து பெற்ற உதவிகளுக்குக் கைமாறாக இல்லாமல் அவர் அவரிடம் வைத்துள்ள ' அன்பின்' நிமித்தம் அவரிடமிருந்து சில செயல்களை எதிர்பார்ப்பதாகக் கூறுகிறார்.நாமும் கூட நமக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு சில உதவிகள் செய்துவிட்டு அவர்கள் நமக்குக் கடன் பட்டவர்கள் எனும் எண்ணத்தில் பலவற்றை அவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.பல நேரங்களில் நம் உறவுகளிலும் நமக்கென ஒரு வரையறையை வைத்துக்கொள்ளாமல் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்து போவதும்,அந்த ஏமாற்றம் நமக்கு சோர்வைத்தருவதும் பழக்கமாகிப்போன விஷயங்களே!இந்த சமயங்களில் தூய பவுலின் வரிகள் நம் எல்லை என்ன என்பதை நமக்கு நினைவூட்ட வேண்டும்.நாம் செய்யும் சிறிய பெரிய செயல்களைக் கைமாறு கருதிச் செய்யாமல் ' அன்பின்'அடிப்படையில் மட்டுமே செய்தால் நம் உறவும் வளரும்; ஏமாற்றமும் மிஞ்சும்.அன்றாட வாழ்க்கையின் மகிழ்ச்சி கருதி, நம் உறவுகளின் உண்மை தன்மை கருதி தந்தை கூறும் கருத்துக்கள் காலத்துக்கும் நினைவில் கொள்ளப்பட வேண்டியவை.அழகான கருத்துக்களை அன்றாடம் அள்ளித்தெளிக்கும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Practical message to reflect....nice Father.. drawing lines should be done prudently ... not at every case...

    ReplyDelete