Thursday, November 24, 2016

கண்களைப் பிடுங்கி

சிம்சோன்-தெலீலா திரைப்படத்தின் ஒரு க்ளிப் பார்த்தேன் நேற்று.

சிம்சோனின் தலைமுடி மழிக்கப்பட தன் ஆற்றலை இழக்கின்றார் சிம்சோன்.
அவரின் கண்களைப் பிடுங்குகின்றனர் பிலிஸ்தியர்.
மிகவும் கொடுமையான நிகழ்வு அது.

ஆனால் அதன் அர்த்தத்தை நீத 14:1-5 ஐ இணைத்து வாசித்தால்தான் புரிந்து கொள்ள முடிகிறது.

சிம்சோன் படலத்தில் சிம்சோன் சொல்லும் முதல் வார்த்தை, 'நான் பார்த்தேன் ஒரு பெண்ணை!' என்பதுதான்.

திம்னா என்ற நகருக்குச் செல்லும் சிம்சோன் அங்கே ஒரு பெண்ணைக் கண்டதாக தன் பெற்றோரிடம் வந்து செல்கின்றார்.

மேலும், இஸ்ரயேலின் பாவமும் அதுதான். ஒவ்வொருவரும் தங்கள் கண்ணில் சரி என்று பட்டதைத்தான் செய்தனர்.

கண் என்று தொடங்கி கண் இழந்து முடிகிறது சிம்சோனின் வாழ்க்கை.

இரண்டாம் ஏற்பாட்டிலும் இதே போன்றதொரு சொல்லாடல் வருகிறது.

கலாத்திய நகர திருச்சபைக்கு எழுதும் பவுல், 'எனக்காக நீங்கள் உங்கள் கண்களையும் பிடுங்கிக் கொடுப்பீர்கள்!' என்கிறார் (4:15).

கண்களை வைத்து அன்பை வளர்த்தார் சிம்சோன்.

ஆனால், அன்பே ஒரு கட்டத்தில் அவரின் கண்களை எடுத்துவிடுகிறது.

அன்பின் அடையாளமாக கண்களைப் பிடுங்குதலை முன்வைக்கிறார் பவுல்.

1 comment:

  1. "வாளை எடுப்பவன் வாளால் மடிவான்"... நாம் கேட்டதுதான்.எதை, சமயங்களில் யாரை நாம் மிக நெருக்கமாக நினைக்கிறோமோ அதுவே/ அவரே நம் முடிவுக்கும் காரணமாகி விடுகிறது/ விடுகிறார்.தனக்கு டிலைலா மீது காதல் பிறக்கக் காரணமான தன் கண்களைப் பறிகொடுப்பதும்,தன்னை வெகுவாய் நேசித்த இஸ்ரேல் மக்கள் தங்கள் அன்பின் அடையாளமாகப் பவுலுக்குத் தங்கள் கண்களைக்கூடப் பிடுங்கித்தானமாகக் கொடுக்க முன் வந்திருப்பார்கள் என்பதும் இதற்கு உதாரணங்களாகப் படுகின்றன இன்றையப் பதிவில். இதனால் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? எல்லா விஷயங்களிலும் நாம் கற்றுக்கொள்ளப் பாடம் அவசியமில்லை; சிலவை நாம் தெரிந்து கொள்ள மட்டுமே என்று தந்தை சொல்வது என் செவிகளில் விழுகிறது.....சரிதானா ஃபாதர்? வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete