Monday, November 21, 2016

பாடகி

ஆலயப் பாடகர்கள், பாடகர்குழுவினர் இவர்களின் திருநாளை நாளை நாம் கொண்டாடுகிறோம்.

இவர்களின் பாதுகாவலி செசிலி.

'ஒருமுறை பாடுவது இருமுறை செபிப்பது' என்கிறார் தூய அகுஸ்தினார்.

வழிபாட்டில் பாடல் பாடுவது என்பது எல்லா சமயங்களுக்கும் பொதுவான ஒன்றாக இருக்கிறது.

பெரிய இறையியல் கோட்பாடுகளைக் கூட மிக எளிதாக புரிய வைக்கும் ஆற்றல் பாடலுக்கு உண்டு:

'முதலாகி முடிவாகி முழுதான அன்பாகி மூன்றாகி ஒன்றானவா!'

என்பது ஒரு பாடல் வரி.

தமதிருத்துவத்தை இவ்வளவு சுருக்கமாக, இவ்வளவு எளிதாக வேறு யாராலும் சொல்ல முடியாது.

செசிலி ஒரு அழகி.

தன் அழகையும் அறிவையும் தன் இசையாக இறைவனுக்கு அர்ப்பணித்தாள்.

இன்னைக்கு ஒருநாளாவது நானும் பாடலாம்னு நினைக்கிறேன்.

1 comment:

  1. அழகோடு அறிவையும் இறைவனுக்கு இசையாக அர்ப்பணித்த புனித செசிலியா...இந்தப் பதிவில் உள்ள படமே சொல்கிறது யாரையும் இரண்டாவது முறையாகத் திரும்பிப் பார்க்கச் செய்யும் அழகு இவளுடையது என்று. இறைவன் தனக்குக் கொடையாக அளித்த திறமைகள் அத்தனையையும் அவருக்கே திரும்ப அர்ப்பணித்த இவள் பாடகர் குழுவின் பாதுகாவலி.இறைவனின் நாமத்தையும்,அவரது மாண்பையும் உரத்த குரலில் ஒலி எழுப்பிச் சொல்லும் யாருமே பாடகர்தான்.அப்படியொரு பாடகர் குழுவில் நானும் ஒருத்தி என்பதில் பெருமையும் இறைவனுக்கு நன்றியும் சொல்கிறேன்.பாடலின் ஆற்றலைப்புரிய வைக்க தந்தை கொடுத்திருக்கும் அந்த உதாரண வரிகள்..." முதலாகி முடிவாகி முழுதான அன்பாகி மூன்றாகி ஒன்றானவா!"..., என்னை மலைக்க வைக்கின்றன.இன்னைக்கு ஒருநாளாவது பாடலாம்னு நினைக்கும் தந்தைக்கு "ஆல் த பெஸ்ட்!" அனைத்துப் பாடகர்களுக்கும் புனித செசிலியாவின் திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete