Thursday, September 24, 2015

நெஞ்சம்நிறை நன்றியோடு


நாளையுடன் என் புனே வகுப்புகள் நிறைவடைகின்றன.

7 ஆண்டுகளுக்கு முன் ஏறக்குறைய இதே நாளில் இந்த இடத்திலிருந்து குருமாணவர் படிப்பை முடித்து வெளியேறினேன்.

7 ஆண்டுகளுக்குப் பின் இன்று அருட்பணியாளராக, ஆசிரியராக இந்த இடத்தில் மீண்டும் நிற்கிறேன்.

திருமணம் முடித்து மணமகன் இல்லம் செல்லும் மணப்பெண், தன் தாயகம் திரும்பியதுபோல உணர்வு.

'எல்லாமே மாறிடுச்சு!' என்றும் சொல்லலாம்.

'எதுவுமே மாறல!' என்றும் சொல்லலாம்.

'மாற்றம்' 'முன்னேற்றம்' 'அன்புமணி'

என்று எங்கு பார்த்தாலும் புதிய போஸ்டர்கள் நம் ஊரில் முளைத்துக் கொண்டிருக்க,

'மாற்றம்' 'முன்னேற்றம்' 'பாப்பிறைக் குருமடம்'

என்று சொன்னால் பொருத்தமாகவே இருக்கும்.

நான் மாணவனாக இருந்த நாட்களில் இருந்த பேராசிரியர்கள், உதவியாளர்கள் இன்னும் இங்கே இருக்கிறார்கள்.
நான் 9ஆம் வகுப்பு படிக்கும்போது இறுதியாகப் பார்த்து, இன்று மீண்டும் ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பின் அருட்பணியாளர்களாக இருவரை இங்கே சந்தித்தேன்.

இந்த 20 நாட்கள் 'மோசேயின் பாடல்' (இணைச்சட்டம் 32) பற்றிப் பாடம் எடுத்தேன். நான் சொல்லிக் கொடுத்தேன் என்று சொல்வதைவிட நிறையக் கற்றுக்கொண்டேன் என்று சொல்வேன்.

புனே குருமடம் ஒரு மினி இந்தியா.

இங்கு வந்த நேரம் ஆதார் கார்டும் வாங்கியாயிற்று.

புதிய அறிமுகங்கள்.

இறைவன் பாப்பிறைக் குருமடத்தை என்றும் தன் கைகளில் வைத்து

வழிநடத்தட்டும்!

'இந்தியாவே! உன் பிள்ளைகள் உன்னைத் தாங்கிக் கொள்வார்கள்!'

என்று திருத்தந்தை 13ஆம் லியோ அவர்களால் தொடங்கப்பட்ட இப்பாசறை

இன்னும் நிறைய மனங்களை ஊக்குவிக்கட்டும்...


2 comments:

  1. தந்தைக்கு வாழ்த்துக்கள் ! "நன்றி மறப்பது நன்று அன்று; நன்று அல்லது
    அன்றே மறப்பது நன்று" என்ற திருக்குறளுக்கு ஏற்றவாறு ஒரு அழகான படைப்பு தான் இந்த "நெஞ்சம்நிறை நன்றியோடு" என்ற பதிவு என்று நினைக்கிறேன்.உங்களை போன்ற நல்ல மனிதர்களுக்கு என்றும் எங்கு சென்றாலும் நல்லதே நடக்கும். இந்த நாட்களில் நீங்கள் சந்தித்த புதிய நபர்கள் அனைவருக்காகவும் சிறப்பாக உங்களின் அனைத்து பயணங்களும் சிறப்புற அமைய இறைவனை தொடர்ந்து வேண்டுகிறேன்.இறை கரம் உங்களை தொடர்ந்து வழிநடத்தட்டும். தந்தைக்கு பாராட்டுக்கள் !

    ReplyDelete
  2. உரோமை நகரிலிருந்து வந்து முழுதாக மூன்று நாட்களாவதற்குள் பூனே சென்று மூன்று வாரங்கள் எதிர்காலக் குருக்களுக்கு ஒரு 'பேராசிரியராக'ப் பணியேற்று நாளைத் தன் இருப்பிடம் நோக்கி வரும் தந்தையை மதுரை மண்ணின் 'மல்லிகை சரம்' கொடுத்து வரவேற்கிறேன். தங்களுடைய இன்றையப் பதிவின் ஒவ்வொரு எழுத்தும் பூனே பாப்பிறை குருமடத்தின் மீது தங்களுக்குள்ள பாசத்தையும்,நன்றியுணர்வையும் வெளிப்படுத்துகின்றன.கற்றுக்கொள்ள மனமிருக்கும் ஒருவரால்தான் சொல்லிக் கொடுக்கவும் முடியும் என்பதை நிருபிக்கின்றன தங்களின் வரிகள்.கண்டிப்பாக தங்களைப் போல நெஞ்சங்கள் இணைந்து இந்தியத் திருச்சபையை மட்டுமல்ல....உலகத் திருச்சபையையே தாங்கிக் கொள்வார்கள்.திருத்தந்தை 13 ம் லியோ அவர்களுக்கும்,வருங்காலத் திருச்சபையின் தூண்களுக்கு உரமிடும் 'பூனே பாப்பிறைக் குருமடத்திற்கும்' என் நன்றிகள்!!!

    ReplyDelete