Thursday, November 7, 2013

மக்கள் பொறுமையிழந்தனர்

ஏதோம் நாட்டைச் சுற்றிப் போகும்படி, ஓர் என்ற மலையிலிருந்து அவர்கள் 'செங்கடல் சாலை' வழியாகப் பயணப்பட்டனர். அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமையிழந்தனர். மக்கள் கடவுளுக்கும், மோசேக்கும் எதிராகப் பேசினர்: 'இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது' என்றனர். உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார். அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். (எண்ணிக்கை நூல் 21:4-6)

'பொறுமையிழந்த' இஸ்ரயேல் மக்கள் தண்டிக்கப்படுகின்றனர்.

வாழ்க்கையில் பொறுமை ரொம்ப அவசியம்! நான் அனுதினம் இதைக் கற்றுக்;கொள்கிறேன்!

'சல்லடையிலும் தண்ணீர் சுமக்கலாம். அது பனிக்கட்டியாகும் வரை காத்திருந்தால்...'

இந்த நாள்...இனிய நாள்...!

1 comment:

  1. Anonymous11/07/2013

    'சல்லடையிலும் தண்ணீர் சுமககலாம்...அது பனிக்கட்டியாகும் வரை காத்திருந்தால்' பொறுமையை விளக்க இதற்கு மேல் என்ன வேண்டும்
    பொறுத்தார் பூமியாள்வார்....பொறுமை காப்போம்,பூமியை ஆள்வோம்
    இரவு வணக்கங்கள்

    ReplyDelete