Friday, November 1, 2013

ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று

பின்பு, மேகம் சந்திப்புக்கூடாரத்தை மூடிற்று. ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று. சந்திப்புக்கூடாரத்தின் மேலே மேகம் நின்றிருந்ததாலும், ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பியதாலும் மோசே உள்ளே நுழைய முடியாமல் போயிற்று .. ... ... பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் திருஉறைவிடத்தின்மேல் பகலில் ஆண்டவரின் மேகம் இருப்பதையும், இரவிலோ அதில் நெருப்பு இருப்பதையும் இஸ்ரயேல் வீட்டார் காண்பார்கள்.' (விடுதலைப்பயணம் 40:34-35,38)

இன்று மாலை எங்கள் ஆலயத்தின் கதவைத் திறந்த போது சின்னஞ்சிறு பிள்ளைகளின் கூட்டம். 'Trick or Treat' என்று கேட்டார்கள். Trick என்றேன். நிறைய விளையாட்டுக்களை விளையாண்டோம். இறுதியாக ஒரு குழந்தையிடம் கேட்டேன். அவள் சொன்னாள்: 'per abolire la male' - சொல்லிவிட்டு வெடி வெடிக்க ஓடிச் சென்று விட்டாள். இங்கு வெடிச்சத்தம் கேட்கும்போது எம் மண்ணிலும் தீபாவளி வெடிச்சத்தம் கேட்கிறது என்று நினைக்கும்போது கண்கள் கலங்குகின்றன. என்னவோ இப்போதெல்லாம் நம் ஊரை நினைத்தால் கண்ணீர் வந்துவிடுகிறது.

'தீமை அகல வேண்டும்!' என்பதே நம் எல்லோரின் ஆசை. 'அனைத்துப் புனிதர்களின் தினத்திற்கு முந்தைய மாலை' என்ற அர்த்தத்தைக் கொண்ட வார்த்தையே ஹாலோவின். கத்தோலிக்கத் திருச்சபையின் நம்பிக்கை அறிக்கையின் இரண்டாம் பகுதியில் நாம் அறிக்கையிடுவது இதுதான்: நம் திருச்சபை மூன்று நிலைகளில் உள்ளது – மகிமை பெற்ற திருச்சபை, துன்புறம் திருச்சபை மற்றும் பயணம் செய்யும் திருச்சபை. நவம்பர் மாதம் நாம் நினைவு கூறுவது துன்புறும் திருச்சபை. நவம்பர் 1 நினைவுகூறுவது மகிமை பெற்ற திருச்சபை. 

இறப்பை தங்கள் வாழ்வால் வென்றவர்கள் இவர்கள். இறப்பு என்ற தீமை அன்பால் அகன்றுவிடும். இறப்பிற்கு என்னவோ தெரியவில்லை மனிதர்கள் அன்பினால் என்றும் வாழ்வார்கள் என்று. 

யாரை அன்பு செய்வது? யாருக்குப் பணிபுரிவது? என்ற கேள்விகளுக்குப் பதிலாக இருப்பதுதான் விடுதலைப்பயணம். எகிப்தை அன்பு செய்வதா? பாரவோனுக்குப் பணிபுரிவதா? என்ற நிலையிலிருந்து யாவே இறைவனை அன்பு செய்யவும், அவருக்குப் பணிபுரியவும் அழைப்பு விடுக்கின்றது விடுதலைப்பயண நூல்.

அன்பினால் புதிய உலகு செய்வோம்!

அன்பே சிவத்தின் (கடவுளின்) பிரசன்னம்.


1 comment:

  1. Anonymous11/01/2013

    'அன்பு நிலவும் உள்ளம்,அது ஆண்டவனின் இல்ல்ம்' என்று கூறுகிறது ஒரு திரைப்படப்பாடல். நம்மை விட்டு உடலால் பிரிந்து நம் உள்ளத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் உறவுகளையும் இம்மாதம் விசேஷமாக நினைவு கூறுவோம்.Halloween விளக்கம நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்.

    ReplyDelete