Saturday, November 30, 2013

எனது பெயரை ஏன் கேட்கின்றாய்?

மனோவாகு ஆண்டவரின் தூதரிடம், 'உமது பெயர் என்ன? உம் வார்த்தைகள் நிறைவேறும்போது நாங்கள் உம்மைப் பெருமைப்படுத்துவோம்' என்றார். ஆண்டவரின் தூதர் அவரிடம், 'எனது பெயரை ஏன் கேட்கின்றாய்? அது வியப்புக்கு உரியது' என்றார். மனோவாகு ஓர் ஆட்டுக்குட்டியைக் கொண்டுவந்து உணவுப்படையலுடன் பாறைமீது ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தார். (நீதித் தலைவர்கள் 13:17-18)

இன்று சிம்சோன் வாழ்க்கை நிகழ்வுகளைத் தொடங்குகிறோம். ஆண்டவரின் தூதர் சிம்சோனின் தாய்க்குக் காட்சி தருகின்றார். பெண்ணின் பெயர் இங்கு தரப்படவில்லை. மனோவாகு என்ற சிம்சோனின் தந்தையின் பெயரையே ஆசிரியர் பதிவு செய்கிறார். ஆண்டவரின் தூதரை நோக்கி மனோவாகு கேட்கும் கேள்வி இதுதான்: 'உம் பெயர் என்ன?' 

யூத மரபில் இறைவனின் பிரசன்னம் பெயர் என்றே சொல்லப்பட்டது. எருசேலேம் ஆலயத்தில் கூட இறைவனின் 'பெயர்' மட்டுமே குடியிருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். பெயரும் ஆளும் ஒன்று என்பது அவர்களின் சிந்தனை. வியப்புக்குரியது அது என முன்வைக்கின்றார் தூதர்.

நம் அனைவருக்குமே பெயர்கள் உண்டு. நம் பெயர்கள் நம்மை அடையாளப்படுத்துகின்றன. நம் பெயர்களும் வியப்புக்கு உரியவைதாம். ஏனெனில் நாம் அனைவருமே வியப்புக்குரியவர்கள்தாம். ஒவ்வொருவரின் பெயர் மட்டுமே ஒருவரோடு முழுமையாக பயணம் செய்கிறது. வியப்புக்குரிய நம் பெயருக்கேற்ற வாழ்க்கை வாழலாமே!

'எனது பெயரை ஏன் கேட்கின்றாய்?'

1 comment:

  1. Anonymous11/30/2013

    நம் பெயர்...அது என்னவாக இருப்பினும் அதைநேசிக்கிறோம்.அது மாற்றி உச்சரிக்கப்பட்டாலோ, இல்லை பிழையுடன் எழுதப்பட்டாலோ நமக்குப் பிடிப்பதில்லை.காரணம் அது நமது அடையாளம்.அதனால் தான் நாம் அதிகமாக நேசிப்பவர்களை அவர்கள் பெயரை நினைக்கும்போதே நம் கண்கள் நிறைகின்றன.ஆனால சிலரை அவர்கள வைத்திருக்கும் பெயருக்குக்குள்ள மரியாதையின் நிமிததம் மாற்றிக் கூப்பிடுகிறோம். அந்தப் பெயர்களும் வியப்புக்குரியவை தான்....நம் பெயர்கள் நிலைத்து நிற்கும் வகையில் ஒருவாழ்க்கை வாழ்வோமே!

    ReplyDelete