இன்றைய (10 டிசம்பர் 2020) நற்செய்தி (மத் 11:11-15)
கேட்கச் செவியுள்ளோர்
இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'திருமுழுக்கு யோவான் மனிதர்களில் மிகச் சிறந்தவர்' என்று முன்மொழியும் இயேசு, 'விண்ணரசில் சிறியவர் அவரினும் பெரியவர்' என்கிறார். மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தில், திருமுழுக்கு யோவானின் சீடர்களுக்கும் இயேசுவின் சீடர்களுக்கும் இடையே ஒரு உரசல் இருந்துகொண்டே இருந்தது என்பதை நாம் நற்செய்தியின் பல இடங்களில் காண முடிகிறது. 'திருமுழுக்கு யோவான் சிறந்தவர்' என்ற வாக்கியம்தான் இயேசுவின் வாக்கியமாக இருந்திருக்க வேண்டும். 'விண்ணரசில் சிறியவர் அவரை விடப் பெரியவர்' என்ற வாக்கியம் மத்தேயு குழுமத்தின் சேர்க்கையாக இருக்க வேண்டும். இப்படித்தான் விவிலிய அறிஞர்கள் இப்பகுதியைப் புரிந்துகொள்கின்றனர்.
திருமுழுக்கு யோவானை மக்கள் ஏற்றுக்கொள்ள இடறல்பட்டனர் என்று சொல்கின்ற இயேசு, மறைமுகமாக, தன்னை ஏற்கவும் அவர்கள் இடறல்படடுவார்கள் என்கிறார். எனவேதான், 'கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்' என நிறைவு செய்கின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 41:13-20) இதை ஒட்டிய ஒரு வாக்கியத்தை நாம் வாசிக்கின்றோம்:
'மக்கள் ஒருங்கே சிந்தித்துப் புரிந்துகொள்வர்'
எதை?
புழு பூச்சி போல இருக்கின்ற இஸ்ரயேலை ஆண்டவர் போரடிக்கும் கருவி போல உறுதியாக மாற்றுவதை.
இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்வது என்ன?
''உன்னிடத்தில் பெரிய புதையல் இருக்கிறது' என்று நீ யாரிடமாவது கூறு! யாரும் உன்னை நம்ப மாட்டார்கள்!' என்று ரசவாதி என்னும் புதினத்தில் எழுதுகிறார் பவுலோ கோயலோ.
எசாயாவின் காலத்தவர்கள் ஆண்டவராகிய கடவுளின் அரும்பெரும் செயல்களை ஏற்றுக்கொள்ளத் தயங்கினர்.
இயேசுவின் சமகாலத்தவர்கள் திருமுழுக்கு யோவானையும் இயேசுவையும் ஏற்றுக்கொள்ளத் தயங்கினர்.
ஏன்?
'என்னிடம் உள்ளதே போதும்' என்ற தேக்க மனநிலை, எனக்கு மேலிருந்து வரும் எதையும் ஏற்றுக்கொள்ள என்னை அனுமதிப்பதில்லை.
'அவரிடம் பெரிதாக என்ன இருக்கிறது?' என்ற எதிர்கேள்வியும், என்னை மற்றவர்களிடமிருந்து அந்நியமாக்கிவிடுகிறது.
'ஒருங்கே சிந்திப்பதும்' 'கேட்கும் செவி கொண்டிருப்பதும்' நம் மனத்தின் செயல்கள்.
ஆண்டவரின் அரும்பெரும் செயல்களை அறிந்துகொள்ளத் தயார்நிலையில் உள்ளவர்களுக்கே அவர் தம் செயல்களை வெளிப்படுத்துகின்றார்.
யோவானைக்குறித்தும்,இயேசுவைக்குறித்தும் இடறல் பட்ட மக்களின் தலைமுறைகள் இன்றும் இருப்பதைப் பார்க்கவே செய்கிறோம். நம்மிடமுள்ள மேட்டிமை எண்ணமே “எனனிடம் உள்ளதைவிடப் பெரிதாக என்ன வெளியேயிருந்து வந்துவிடப்போகிறது?” எனும் எதிர்எமறை எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.
ReplyDelete‘ஒருங்கே சிந்திப்பதும்’, ‘ கேட்கும் செவி கொண்டிருப்பதும்’ நம் மனத்தின் செயல்கள் என்கிறார் தந்தை.
எனக்கு வேண்டுமென நானே நினைத்தால்ஒழிய ஆண்டவரேயானாலும் அவரின் செயல்கள் என்னை வந்தடைவதில்லை.சரியே!
“ கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும்” என்பதன் எதிரொலியாக வரும் பதிவு! தந்தைக்கு நன்றிகள்!!!
I read somewhere an explanation about St. John the Baptist. He is the greatest of all the prophets because he saw the Messaiah which no prophet could. He is considered the least, because he is the last prophet . And he could go to heaven only after the resurrection of Jesus, though he had seen him.
ReplyDeleteWell explained Catherine! Something new to me. Thank u. Love....
ReplyDelete