Friday, December 4, 2020

இதுதான் வழி

இன்றைய (5 டிசம்பர் 2020) முதல் வாசகம் (எசா 30:19-21இ23-26)

இதுதான் வழி

'நீங்கள் வலப்புறமோஇ இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும் இதுதான் வழிஇ இதில் நடந்து செல்லுங்கள் என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்!'

நான் சில நாள்களுக்கு முன் வழி தெரியாத புதிய ஊர் ஒன்றுக்குப் பயணம் செய்தேன். பயணத்தின் வழிகாட்டியாக கூகுள் வரைபடத்தை என் செயல்திறன் பேசியில் பயன்படுத்தினேன். பாதி தூரம் செல்லும்போது கூகுள் வரைபடச் செயலி 'ம்யூட்' ஆகிவிட்டது. '400 மீ வலது' '300 மீ இடது' என்று சொல்லிக்கொண்டே வந்த செயலி திடீரென அமைதி ஆனவுடன் என்னால் தொடர்ந்து முன்னால் செல்ல இயல வில்லை. வரைபடத்தையும் பார்த்துக்கொண்டுஇ சாலையையும் பார்த்துக்கொண்டு முன்னே நகர்வது கடினமாக இருந்ததால்இ அங்கேயே நின்று அதைச் சரிசெய்யத் தொடங்கினேன்.

நம் கண்கள் வரைபடத்தின்மேல் இருந்தாலும்இ வழியின் மேல் இருந்தாலும் நம்மை இயக்குவது என்னவோ ஒலிதான். கூகுள் வரைபடச் செயலி வருவதற்கு முன் நம் வாயும் காதுகளும்தான் மேப் என்று இருந்தது. எல்லா இடங்களிலும் நிறுத்தி வழி கேட்போம். வழி சொன்னவரின் வார்த்தைகள் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்க நாம் வழி அறிவோம்.

ஆகஇ வழி அறிவதற்கும் ஒலிக்கும் நிறையத் தொடர்பு இருக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில்இ அடிமைத்தனத்தில் வாழ்ந்த மக்களுக்கு ஆறுதல் சொல்கின்ற இறைவாக்கினார் எசாயாஇ 'உங்கள் காதுகளில் ஒலியைக் கேட்பீர்கள்!' என்கிறார். இதன் பொருள் என்ன?

இவ்வளவு நாள்களாக ஆண்டவராகிய கடவுள் அவர்களை நான்கு நிலைகளில் வழிநடத்துகின்றார்:

(அ) பத்துக் கட்டளைகள் என்னும் பலகைகள் வைக்கப்பட்ட உடன்படிக்கை பேழை வழியாக

(ஆ) குருக்கள் வழியாக

(இ) இறைவாக்கினர்கள் வழியாக

(ஈ) அரசர்கள் வழியாக

மேற்காணும் நான்கும் பாபிலோனிய அடிமைத்தன நிகழ்வில் ஒன்றுமில்லாமல் போகின்றன. ஆகஇ புறக் காரணிகள் எல்லாம் அகற்றப்பட்ட நிலையில்இ ஆண்டவராகிய கடவுள் அவர்களின் அகம் நோக்கி அவர்களைத் திருப்புகின்றார். இதுவரை உங்களுக்கு வெளியிலிருந்து நீங்கள் கேட்ட மற்றவர்களின் குரல் உங்களைத் திசை திருப்பியது. ஆனால்இ உங்கள் செவிகளுக்குள் நீங்கள் கேட்கும் என் குரல் உங்களைச் சரியான திசையில் வழிநடத்தும் என்கிறார் ஆண்டவராகிய கடவுள்.

நம் உள்ளத்திலும் இறைவனின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதை மனச்சான்றுஇ அல்லது சப்கான்ஷியஸ் மைன்ட்இ உள்ளுணர்வு என எப்படி வரையறுத்தாலும்இ அந்தக் குரலைக் கேட்பவர் சரியானதைத் தெரிவு செய்கிறார். இதை நம் வாழ்வில் நாம் பல முறை உணர்ந்திருக்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில்இ இயேசு மக்கள் கூட்டத்தின்மேல் பரிவு கொண்டு அவர்களை வழிநடத்த திருத்தூதர்களை நியமிக்கின்றார். 

இயேசுவின் குரலை மக்கள் கேட்குமாறுஇ மக்களின் செவிகளில் விழச் செய்யுமாறு புறப்பட்டுச் செல்கின்றனர் திருத்தூதர்கள்.

வெளிப்புறத்தின் ஒலிகள் மௌனமானால் உள்புறத்தின் ஒலிகள் தெளிவாகக் கேட்கும்.

நமக்கு நாமே மௌனமானால் அவரின் குரல் இனிதே கேட்கும்.

1 comment:

  1. ஒலிக்கும்,நம் உள்ளத்திற்கும் உள்ள உறவை அல்லது தொடர்பை விவரிக்கும் ஒரு பதிவு.நம் உள்ளத்தில் கேட்கும் இறைவனின்குரலை( ஒலியை) சரியான முறையில் கேட்பவர் சரியானதைத் தெரிவு செய்கிறார்.குரல்கள் நமக்கு எங்கிருந்து வேண்டுமானாலும் ஒலிக்கலாம். ஆனால் அது வரும் திசைதெரிந்து செயல்படுபவரே வெற்றிபெறுகிறார். உள்புறத்தை வந்து சேரும்ஒலிகள் நம் செவிகளை அடைய வேண்டுமெனில் வெளிப்புறத்தின் குரல்கள் மௌனமாக வண்டும் என்கிறார் தந்தை. செவிகளில் அகச்செவி,புறச்செவி என இரண்டுண்டு.புறச்செவிகள் எப்பொழுதும் திறந்திருப்பதுபோல் நமக்குத் தெரிந்திடினும் அகச்செவிகள் திறக்கும் போது மட்டுமே அசரீரியாக இறைவன் நம்மில் பேசுவதைக்கேட்க முடியும்.

    மௌனம் காக்கவென்று சில மணித்துளிகளை ஒதுக்குவோம்....அவரின் குரல் இனிதே கேட்க.அடிமனத்தை ஊடுருவித்தொடும் வார்த்தைகளுக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete