Thursday, December 10, 2020

நீங்கள் கூத்தாடவில்லை

இன்றைய (11 டிசம்பர் 2020) நற்செய்தி (மத் 11:16-19)

நீங்கள் கூத்தாடவில்லை

1964ஆம் ஆண்டு உளவியல் நிபுணர் எரிக் பெர்ன் (Eric Berne) அவர்கள் எழுதி மிகவும் பிரபலமான புத்தகத்தின் பெயர், 'மனிதர்கள் விளையாடும் விளையாட்டுகள்: மனித உறவுகளின் உளவியல்' (Games People Play: The Psychology of Human Relationships). இந்த நூலில் நாம் ஒவ்வொருவரும் வௌ;வேறு உறவு நிலைகளில் விளையாடும் விளையாட்டுகள் பற்றி மிக அழகாக விவரிக்கின்றார். மனித உறவின் பரிமாணங்களைப் புரிந்துகொள்வதற்கான ஒரு நல்ல நூல் இது.

எடுத்துக்காட்டாக, என் தந்தை இறந்த நாளில், நான் நாள் முழுவதும் சாப்பிடவில்லை. அடுத்த நாள் எனக்குச் சாப்பாடு கொடுக்கப்பட்டது. 'என் அப்பாவே இல்லை! எனக்கு எதற்கு சாப்பாடு?' என நான் கொடுத்த சாப்பாட்டை உண்ண மறுத்தேன். ஆனால், மூன்றாம் நாள் நானே சோறு கேட்டு வீட்டுக்குள் சென்றேன். இது நான் விளையாடும் விளையாட்டு. ஒரு பக்கம் என் தந்தையின் இழப்பு ஒரு வெறுமையை ஏற்படுத்தினாலும், என் இழப்பை எல்லாரும் உணர வேண்டும் என்றும், எல்லாரும் என்னைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தும் நான் விளையாடும் விளையாட்டு இது.

அல்லது, ஒரு குழந்தை நடந்து போகிறது. திடீரென தடுக்கி விழுகிறது. யாரும் பார்க்கவில்லையென்றால், அது எழுந்து தானே சென்றுவிடும். யாராவது பார்த்துவிட்டால் உடனடியாக அழத் தொடங்கும். அதாவது, தன் தோல்வியை அழுகையாக மாற்றி, மற்றவரின் கவனத்தை ஈர்க்க அந்தக் குழந்தை ஒரு விளையாட்டை விளையாடுகிறது.

இப்படியாக, நாம் ஒருவர் மற்றவரை திருப்திப்படுத்த, காயப்படுத்த, கவனம் பெற, கவனத்தைத் திருப்ப, தற்காத்துக்கொள்ள என நிறைய விளையாட்டுகளை விளையாடுகிறோம்.

இந்த விளையாட்டுகளின் நிதர்சனம் என்னவென்றால், இவற்றில் நாம் வரையறுக்கும் விதிமுறைகளே சரி என்று நாம் வாதிடுகின்றோம். 

'நீ அப்படி பேசியிருக்கக் கூடாது!' என்று என்னிடம் யாராவது சொன்னால், 'இல்லை! நான் அப்படிப் Nபுச இதுதான் காரணம்!' என்று என் தரப்பை நான் எப்போதும் சரி என்றே முன்னுணர்த்த விரும்புகிறேன்.

இயேசுவின் சமகாலத்தவர் அவரையும் திருமுழுக்கு யோவானையும் ஏற்றுக்கொள்ள மறுப்பதற்காக வித்தியாசமான அளவுகோல்களைக் கையாளுகின்றனர். இதையே குழந்தைகள் விளையாட்டு உருவகம் வழியாக எடுத்துரைக்கின்றார் இயேசு:

'நாங்கள் குழல் ஊதினோம். நீங்கள் கூத்தாடவில்லை.
நாங்கள் ஒப்பாரி வைத்தோம். நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை.'

அதாவது, தங்களுக்கு ஏற்ற செயலை மற்ற குழுவினர் செய்ய வேண்டும் என்று குழந்தைகள் விரும்புகின்றனர். ஆனால், அப்படிச் செயல்பட சூழல் மறுக்கிறது.

திருமுழுக்கு யோவானின் சூழல் வேறு. இயேசுவின் சூழல் வேறு.

இவர்களின் சமகாலத்தவர்கள் தங்களுக்கேற்றாற் போல விதிமுறைகளை வகுத்துக்கொண்டு இவர்களை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர்.

மேற்காணும் நூலின் இறுதியில், நம் உறவு நிலைகளில் விளையாட்டுகள் குறையக் குறைய நாம் முதிர்ச்சி அடைவோம் என்கிறார் ஆசிரியர்.

விளையாட்டுகள் தவிர்த்தால்தான் நான் மற்றவரை ஏற்றுக்கொள்ள முடியும்.

இதையே இயேசு, 'ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்கள் சான்று' என்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 48:17-19), ஆண்டவராகிய கடவுள், தன்னையே கற்பிப்பவராக முன்நிறுத்துகிறார்.

இறைவனிடம் கற்றவர்கள் ஞானம் பெறுவர். ஞானம் பெற்றவர்கள் விளையாட்டுகள் தவிர்ப்பர்.

5 comments:

  1. இறைவனிடம் கற்றவர்கள் ஞானம் பெறுவர். ஞானம் பெற்றவர்கள் விளையாட்டுகள் தவிர்ப்பர்.👌🤝👍

    When we stop( avoid) playing psychological games, we attain maturity.

    Oh Lord!
    Grant us that maturity of being.

    ReplyDelete
  2. உண்மைதான்! பல நேரங்களில் நாம் ஒருவர் மற்றவரைத் திருப்திப்படுத்த...காயப்படுத்த...கவனம் பெற...கவனத்தைத் திருப்ப....தற்காத்துக்கொள்ள நிறைய விளையாட்டுகள் விளையாடுகிறோம். ஒவ்வொரு மனிதரும்...அவரவருக்கு நடக்கும் சம்பவங்களும் வெவ்வேறு என்பதை மறந்து சந்தர்ப்பங்களையும்,சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். இதன் எதிரொலிதான்...

    “ நாங்கள, குழலூதினோம், நீங்கள் கூத்தாடவில்லை;
    நாங்கள் ஒப்பாரி வைத்தோம்,நீங்கள் மாரடித்துப்புலம்பவில்லை” எனும் வரிகள்.
    இம்மாதிரி விளையாட்டுக்களைத் தவிர்த்தால்தான் நாம்’ஞானம்’ பெறுவோம் எனச் சொல்ல வருகிறது இன்றையப்பதிவு.

    “ இறைவனிடம் கற்றவர்கள் ஞானம் பெறுவர்; ஞானம் பெற்றவர்கள் விளையாட்டுக்களைத் தவிர்ப்பர்.”

    எனக்கு வேண்டுவது விளையாட்டா? ஞானமா? நம் மனசாட்சியைக் கேள்வி கேட்கவும்...பதிலைப் பெறவும்...... பதிலின் படி நம் வாழ்க்கைப்பாதையைத் திருத்திக்கொள்ளவும் விடுக்கும் ஒரு அழைப்பு. அழைப்பின்படி வாழ யோசனைதரும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  3. Jesus : நீங்கள் சிறு பிள்ளைகளைப்போல் மாறாவிடில் ....

    Also Jesus: என்னாது சின்னபுள்ளத்தனமா ?!!

    ReplyDelete
  4. The former ‘ child like’& the latter ‘ childish’ I think. Am I right Catherine?

    U sound very dramatic.Congrats!

    ReplyDelete
    Replies
    1. Yes, indeed.. I got to know the difference from Father's sermons only. Just telling in the lighter note.

      Delete