Saturday, December 12, 2020

நாமும் வாழ்வது உறுதி

இன்றைய (12 டிசம்பர் 2020) முதல் வாசகம் (சீஞா 48:1-4,9-11)

நாமும் வாழ்வது உறுதி

சீராக்கின் ஞானநூல் ஆசிரியர் தன் நூலின் இரண்டாம் பகுதியில், முதல் ஏற்பாட்டுக் கதைமாந்தர்கள் பலருக்குப் புகழாரம் சூட்டி மகிழ்கின்றார். எலியா இறைவாக்கினரைப் புகழ்ந்து எழுதும் கவிதைப் பகுதியே இன்றைய முதல் வாசகம். இன்றைய நற்செய்தி வாசகத்திலும், 'எலியா' என்னும் கதைமாந்தர் பற்றி இயேசுவும் அவருடைய சீடர்களும் விவாதிக்கின்றனர். அவர்களின் விவாதத்தில், எலியாவை திருமுழுக்கு யோவானுக்கு ஒப்பிடுகின்ற இயேசு, 'எலியாவை மக்கள் கண்டுணரவில்லை' என்று வருத்தம் தெரிவிக்கிறார்.

சீராக்கின் கவிதையின் கடைசி வரிகளை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

'உம்மைக் கண்டவர்களும் உமது அன்பில் துயில் கொண்டவர்களும் பேறுபெற்றோர். நாமும் வாழ்வது உறுதி.'

எலியா என்னும் கதைமாந்தர், ஆண்டவராகிய கடவுளே உண்மையான கடவுள் என்று சொல்லி கார்மேல் மலையில் பாகாலின் இறைவாக்கினர்களைக் கொன்றழித்தவர். 'என் கடவுள் ஆண்டவர்' என்பதே அவருடைய பெயரின் பொருள். ஆண்டவருக்காகப் பற்றியெரிந்தவர் எலியா.

இருந்தாலும், 'என் உயிரை எடுத்துக்கொள்ளும்' என்ற சில நாள்களில் துவண்டு போகின்றார். கடவுள் மீண்டும் அவரைத் தேற்றுகின்றார். சாரிபாத்து நகரில் குடியேறும் அவர் அந்நகரின் ஆசீராக மாறுகின்றார். இதன் பின்புலத்தில்தான், எலியாவின் இருப்பில் 'நாமும் வாழ்வது உறுதி' என்கிறார் பென் சீராக்.

இன்று நாம் எத்தனை பேரின் வாழ்வுக்குக் காரணமாக இருக்கிறோம்?

நம் வாழ்வுக்குக் காரணமாக இருக்கும் மாந்தர்களை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறதா?

2 comments:

  1. இன்றைய வார்த்தை வழிபாட்டில், வேறு யாருடையவும், சிந்தனைக்குள், தழுவாத, இறைவாக்கினர் " எலியா" வை தாங்கள் தந்துள்ளீர்கள்.

    Yes,this is fr.YESU approach.

    சாரிபாத்து நகரில் குடியேறும் அவர் அந்நகரின் ஆசீராக மாறுகின்றார். இதன் பின்புலத்தில்தான், எலியாவின் இருப்பில் 'நாமும் வாழ்வது உறுதி' என்கிறார் பென் சீராக்.

    So by this message you too call us to be "A BLESSING"

    Yes, we shall, by your stimulation & by the grace of GOD.

    Thank you father🙏

    ReplyDelete
  2. தன் அடியான் எலியாவை முழுமையாகக் கண்டுகொண்ட இயேசுவுக்கு அவரை மக்கள் கண்டுணரவில்லை எனும் ஏக்கம் இருக்கிறது. இருப்பினும் ஆண்டவருக்காகப்பற்றியெரிந்த எலியா பாகாலின் இறைவாக்கினர்களைக் கொன்றொழிக்கிறார்.

    ஆயினும் சில நாட்களில் துவண்டு போகும் எலியாவை ஆசீராக மாற்றுகிறார் ஆண்டவர். நம் வாழ்வின் பாதையிலும் அந்தகாரங்கள் அடிக்கடி எட்டிப்பார்க்கலாம்.

    “உம்மைக்கண்டவர்களும்; உம்மில் துயில் கொண்டவர்களும் பேறுபெற்றோரெனில் நானும் வாழ்வது உறுதி” எனும் எண்ணம் நம்மைத் தாங்கிப் பிடிக்க வேண்டும்.

    “நான் மட்டுமல்ல...என்னால் பிறரையும் வாழவைக்க முடியும்” எனும் மன உறுதி நம் அயலானை வாழவைக்க நம்மை உந்தித்தள்ள வேண்டுமென்று உணர்த்துகின்றன இன்றைய இறைவார்த்தைகள்..

    எவனொருவனால் தன்னையும் தன் வாழ்வுக்குக் காரணமானமானவர்களையும் கண்டு கொள்ள முடிகிறதோ அவனால்..

    “ உம்மைக்கண்டவர்களும்,உமது அன்பில் துயில் கொண்டவர்களும் பேறுபெற்றோர்” எனக் கூற முடியும்.அவன் வாழ்வதும் உறுதி என்கிறார் தந்தை.


    இருள் சூழும் வேளைகளில் என் வாழ்வையும்,இறைவனால் நான் பெற்ற ஆசீர்வாதங்களையும் என்னால உணர முடிந்தால் “நான் வாழ்வதும் உறுதி” என அறுதியிட்டுக்கூறும் தந்தையை இறைவன் என்றென்றும் ஆசீர்வதிப்பாராக! தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete