Friday, December 25, 2020

புனித ஸ்தேவான்

இன்றைய (26 டிசம்பர் 2020) திருநாள்

புனித ஸ்தேவான்

திருஅவை வரலாற்றின் முதல் மறைசாட்சி என அழைக்கப்படும் புனித ஸ்தேவானின் (புனித முடியப்பர்) திருநாளை நாம் கொண்டாடுகின்றோம். முதலில் தெரிவு செய்யப்பட்ட ஏழு திருத்தொண்டர்களில் இவரும் ஒருவர்.

இவரின் மறைசாட்சியத்திற்கும் இயேசுவின் இறப்பிற்கும் நிறைய தொடர்பு இருப்பதுபோல லூக்கா பதிவு செய்கின்றார்.

இந்த நிகழ்வில் புனித பவுலும் இடம்பெறுகிறார். ஸ்தேவானைக் கொலை செய்தவர்கள் சவுலிடம் தன் ஆடைகளை ஒப்படைக்கின்றனர்.

அவர் ஆடைகளைக் காவல்காத்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் ஆண்டவர் அவரைக் காத்துக்கொண்டிருக்கின்றார்.

தன் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு புனித ஸ்தேவான் துணிச்சல் கொண்டிருந்தது எப்படி?

அவருடைய மனவுறுதி மற்றும் மனத்திடம்.

3 comments:

  1. “ அவர் ஆடைகளைக் காவல் காத்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் ஆண்டவர் அவரைக் காத்துக்கொண்டிருக்கிறார்.” நம் மனவுறுதியும், மனத்திடமும் ஆண்டவரைச் சார்ந்ததாக இருப்பின் அவரின் பிள்ளைகளுக்காக ஆண்டவர் எதையும் செய்வார்... ஸ்தோவானுக்குச் செய்தது போல.
    முதல் மறைசாட்சி ஸ்தோவான் குறித்த சிறு குறிப்பு....எனினும் அது தரும் விஷயம் பெரிது. தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. “ அவர் ஆடைகளைக் காவல் காத்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் ஆண்டவர் அவரைக் காத்துக்கொண்டிருக்கிறார்.” நம் மனவுறுதியும், மனத்திடமும் ஆண்டவரைச் சார்ந்ததாக இருப்பின் அவரின் பிள்ளைகளுக்காக ஆண்டவர் எதையும் செய்வார்... ஸ்தோவானுக்குச் செய்தது போல.
    முதல் மறைசாட்சி ஸ்தோவான் குறித்த சிறு குறிப்பு....எனினும் அது தரும் விஷயம் பெரிது. தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  3. "அவர் ஆடைகளைக் காவல்காத்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் ஆண்டவர் அவரைக் காத்துக்கொண்டிருக்கின்றார்."

    Here whom does "அவர்" represent?
    ஸ்தேவானை, கொலை செய்தவர்களா?


    ஸ்தேவானைக் கொலை செய்தவர்கள் சவுலிடம் (தன்) *அவர்√ ஆடைகளை ஒப்படைக்கின்றனர்.

    Spelling errors,while typing is quite negligible.

    But when thousands of people read a particular blog, with more curiosity,can't the author spend just a minute to have a check over it.

    It is my obligation🙏
    Thank you.

    ReplyDelete