Monday, June 6, 2016

கெங்கிரேயா

பவுல் பணி என்ற முறையில் திருத்தூதராக இருந்தாலும், அவரின் தனிமனித அளவிலும் நிறைய மதிப்பீடுகளைக் கொண்டவராக இருக்கிறார்.

கொரிந்து நகரைத் தொடர்ந்து பவுல் அந்தியோக்கியா செல்கின்றார் (காண். திப 18:18-22).

1. தம் நேர்த்திக்கடனை நிறைவேற்ற கெங்கிரேயா துறைமுகத்தில் முடிவெட்டிக் கொள்கின்றார் பவுல்.

இது என்ன நேர்த்திக்கடன்? எந்தக் கடவுளுக்கு பவுல் நேர்ந்து கொண்ட கடன் இது? இவ்வளவு நாள்கள் பவுல் முடிவெட்டாமல் இருந்தாரா? முதல் ஏற்பாட்டு சிம்சோன் போல கடவுளுக்கான நாசீராக இருந்தாரா? - இந்தக் கேள்விகளுக்கு இங்கே பதில் இல்லை. ஆனால், பவுல் தான் கடவுளுக்கு கொடுத்த வாக்குறுதி ஒன்றை இங்கே நிறைவு செய்கின்றார்.

ஆக, கொடுத்த வாக்குறுதிக்கு பிரமாணிக்கம்.

2. எபேசில் திருச்சபையார் அவரைத் தங்குவதற்கு கட்டாயப்படுத்துகின்றனர். ஆனால் அவர் அதற்கு இணங்கவில்லை.

பவுல் அடுத்தவர்களுக்கு 'இல்லை' என்ற சொல்ல அறிந்திருந்தார். எல்லாருக்கும், எல்லாவற்றிற்கும் 'ஆமாம்' சொல்லிவிட்டு, பின்னால் கஷ்டப்படும் நிலையில் நான் பல நாள்கள் இருந்திருக்கிறேன் முன்னால்.

'இல்லை' என்பதை 'இல்லை' எனச் சொல்லும் துணிச்சல் பெற்றிருந்தார் பவுல்.

மற்றொரு வகையில், மேற்காணும் இரண்டு மதிப்பீடுகளும் ஒன்றுதான்: வார்த்தை அல்லது வாக்கு சுத்தம்.

1 comment:

  1. " வாக்கு சுத்தம்".. மாக்களிலிருந்து மனிதனைப் பிரித்துக்காட்டுவது இதுவே.உங்கள் வார்த்தை 'ஆம்' என்றால் 'ஆம்' ,'இல்லை' என்றால் 'இல்லை' என்றே இருக்கட்டும்....இது விவிலியத்தின் வரிகள். தேவைக்குமேல் வார்த்தைகளை விடும்போது மட்டுமே இந்த ' வார்த்தைப்பிறழ்தல்' போன்ற விஷயங்களுக்கு வழி வகுக்கப்படுகிறது.ஒரு விஷயத்தைக் கூறுவதற்கு முன் எத்தனை தடவை வேண்டுமெனினும் யோசிக்கலாம்.ஒருமுறை மனத்தளவில் ஒத்துக்கொண்ட விஷயத்தை நிறைவேற்றுவது 'மனித தர்மம்' ... அது இறைவனிடமானாலும் சரி,மனிதனிடமானாலும் சரி. ஆங்கிலத்தில் ''commitment'....அழகான வார்த்தை.கொடுத்த வாக்கிற்காக உயிரைத் துச்சமாக மதிக்கும் அரிச்சந்திரர்களாக இல்லாவிடினும் குறைந்தபட்சம் 'மனிதர்களாகவாவது' இருக்க முயற்சிப்போமே! இன்றைய மனிதனுக்கு எது தேவையோ அதைக்கொடுத்த தந்தைக்கு நன்றிகள்!....இந்த வாரம் அனைவருக்கும் இனிமை சேர்க்கட்டும்!!!

    ReplyDelete