Friday, June 3, 2016

அக்கிலா பிரிஸ்கில்லா

அக்கிலாவும் பிரிஸ்கில்லாவும் கணவன்-மனைவி ஆவர். இவர்கள் பிறப்பால் யூதர்கள். உரோமையில் குடியேறிய இருந்த இவர்கள், கிளவுதியு மன்னனின் ஆணைக்கிணங்க, இத்தாலியாவை விட்டு வெளியேறி கொரிந்து வருகின்றனர்.

இவர்களின் தொழில் கூடாரம் செய்வது.

கூடாரம் செய்வது என்பது எப்படிப்பட்ட வேலை என்று சரியான தகவல் இல்லை. தற்காலிகக் கூடாரம் அமைப்பவர்களா, அல்லது கூடாரத்திற்கான ஓலை பிண்ணுகிறவர்களா, அல்லது வீட்டுக்கூரை வேய்பவர்களா, அல்லது வீடு கட்டுபவர்களா - எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

இவர்களைச் சந்திக்கின்ற பவுல் இவர்களோடு தங்குகின்றார்.

மேலும், இவர்கள் செய்யும் கூடாரத் தொழிலையும் செய்கின்றார்.

பவுலின் தொழில் இதுதான் என்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது (காண். திப 18:3).

பவுல் தான் செய்யும் கூடாரத் தொழில் பற்றி மிகவும் பெருமைப்படுவது உண்டு. தன் செலவுக்கு தன் கைகளே உழைத்தது எனவும், தான் திருத்தூதராக இருந்தாலும், யார் கையையும் நம்பியிருக்கவில்லை என்றும் சொல்கின்றார். தன் திருத்தூது பணிக்கு நடுவிலும் கூடாரத் தொழில் செய்ய பவுலுக்கு ஆற்றலும், நேரமும் எப்படிக் கிடைத்தன?

என் பசிக்கு நான் வேலை செய்து உண்ணவேண்டும் என்பது என் கனவும்கூட.

அக்கிலா - பிரிஸ்கில்லா - பவுல் இவர்களின் தொழில் செய்யும் ஆர்வத்திலிருந்து நான் கற்றுக்கொள்வது இதுதான்:

திருத்தூதுப் பணியால் வரும் பொருள் ஆதாரத்தை என் தனிப்பட்ட வாழ்வுக்குப் பயன்படுத்திக்கொள்ளாமல், என் வாழ்வை என் கையால் வாழ வேண்டும்!

2 comments:

  1. அழகான வெளிப்பாடு...தந்தை தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார். அக்கில்லா- பிரிஸ்கில்லாவின் கூடாரம் மேயும் தொழிலில் ஆரம்பித்து, அவர்களுடன் கூட்டு சேரும் பவுல், அவர்களின் கூடாரம் செய்யும் தொழிலைத் தன் தொழிலாகத் தழுவிக்கொள்வதாகச் சொல்கிறது இன்றையப்பதிவு. திருத்தூதர் பவுலுக்கு முடிந்த ஒரு காரியம் தன் வாழ்விலும் நடக்கவேண்டுமென நினைப்பது அழகான விஷயமே. ' உழைக்காதவன் உண்ணலாகாது'....இது ஆன்றோர் கூற்று. தன் 'இறைவார்த்தைப்' பணிக்குப் பங்கமில்லாமல் தன் பசிக்குத் தானே வேலை செய்து உண்ண வேண்டும் எனும் தந்தையின் கனவு ஈடேற வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Amen... But then the secular job or work should not become a hindrance to the main work of Gospel proclamation... but again if St.paul can do it. .. the example should be followed...

    ReplyDelete