Tuesday, June 14, 2016

மனவுறுதி

கையில் கொஞ்சம் பணமும், நல்ல உடல்நலமும் இருந்தால் இந்த பூமிப்பந்தையே ஏறக்குறைய 36 மணிநேரங்களில் நம்மால் சுற்றி வந்துவிட முடியும்.

உரோமையில் விசாரிக்கப்படுவதற்காக பவுல் கப்பலில் அழைத்துச்செல்லப்படுகின்றார். அவருடைய பயணம் மற்றும் பயணத்தில் அவர் எதிர்கொண்ட இன்னல்கள் பற்றி விரிவாகச் சொல்கின்றது திப 27-28. வீசும் காற்றை மட்டும் நம்பி விரிக்கப்படும் பாய்மரத்தின் துணையோடுதான் பவுலின் பயணம் இருக்கிறது. சில நேரங்களில் எதிர்க்காற்றால் பயணம் திசைமாறுகிறது. அவர்கள் தங்கும் துறைமுகம் குளிர்காலத்திற்கு ஏற்றதாக இல்லை. புயலில் இருந்து தங்கள் கப்பல் மூழ்காமல் காக்கப்பட தங்களின் உணவுப்பொருள்களையும் கடலில் இருந்துவிட்டு பசியோடு கிடக்கின்றனர். 14 நாட்கள் பட்டினி கிடக்கின்றனர். திடீரென்று கப்பல் தரைதட்டுகிறது.

பவுல் இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியிலும் மிகவும் சாந்தமாக இருக்கின்றார்.

தன் கப்பலின் கேப்டனுக்கு ஊக்கம் தருகின்றார். 'உங்களுள் எவர் தலையிலிருந்தும் ஒரு முடி கூட விழாது' என்கிறார்.

இறுதியாக, மிக எளிமையாக நற்கருணையைக் கொண்டாடுகின்றார்.

அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு அனைவர் முன்னிலையிலும் உண்கின்றார். அனைவரும் மனவுறுதி பெற்று உண்கின்றனர்.

பவுலின் இந்த மனவுறுதி நம் வாழ்வின் இன்னல்கள் நேரத்தில் நமக்கு இருந்தால் எத்துணை நலம்!

2 comments:

  1. Simple Eucharistic celebration.... its a powerful statement.... we dont require the so called high mass or grand mass... We experience the presence of the Lord in simple celebration...

    ReplyDelete
  2. 'இறைவனின் உடனிருப்பு'த் துணையிருப்பின் ஒரு 'புல்லும் ' கூட பூமியை ஆளலாம் எனக்கூறும் ஒரு பதிவு. வீசும் காற்றை மட்டுமே நம்பி பாய் விரித்த பவுலுக்கு அத்தனை இடையூறுகளின் மத்தியிலும் அவர் கரை சேர உதவியது 'இறைவனின் உடனிருப்பு' மட்டுமே என நம்பினார். அந்த நம்பிக்கையின் விளைவாக பயணத்தின் இறுதியில் இறைவனில் சரணாகதி அடைகிறார்; அப்பம் பிட்குகிறார். கண்ணீர்க் கணவாயான நம் வாழ்க்கைப் பயணத்தில் நாம் சந்திக்கும் இடி,மின்னல்,சூறைக்காற்று ,பேய்மழை ...இவை நம்மை ஆட்டுவிக்கையில் நம் பயணம் ஆட்டம் கண்டுவிடாமல் நம்மைக் கரை சேர்ப்பது அந்த 'சிறிய' வடிவில் இருக்கும் 'பெரிய' சக்தி தான் என்பதை உணரவைத்த பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete