Thursday, June 23, 2016

நீதிமொழிகள் - 6

கடனுக்குப் பிணையாக நிற்றல், அல்லது சாட்சிக் கையெழுத்து போடுதல், அல்லது நம் வார்த்தையின் பொருட்டு மற்றவரிடம் மாட்டிக் கொள்ளுதல்.

இத்தகைய சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறது நீமொ 6:1-5.

கடன் வாங்குபவர் ஒருவர். கடன் கொடுப்பவர் மற்றவர். இந்த இரண்டு பேருக்கும் இடையில் நிற்பவர்தான் கடனுக்குப் பிணையாக நிற்கும் மூன்றாம் நபர். இந்த மூன்றாம் நபரின் மேலுள்ள நம்பிக்கையில்தான் அல்லது மூன்றாம் நபரின் நற்சான்றில்தான் முதலாமவருக்குக் கடன் கொடுக்கப்படுகிறது.

இவர் இரண்டு பேருக்கும் அறிமுகமானவராக இருக்க வேண்டும்.

கடன் வாங்கியவர் ஒருவேளை இறந்துவிட்டால், அல்லது கடனைத் திருப்பித் தர இயலாவிட்டால், சட்டத்தின்படி இவர்தான் கடனைத் திருப்பி செலுத்த வேண்டும். கடன் வாங்கும் வரை நல்லவராக இருந்த ஒருவர், கடன் வாங்கியபின் நடத்தை தவற தொடங்கினாலும் இவர்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

சில நேரங்களில் கடன் வாங்கியவரும், கொடுத்தவரும் நிம்மதியாக இருப்பர். இடையில் நிற்கும் இவர்தான் நிம்மதியின்றித் தவிப்பார்.

கடன் பத்திரம், கணிணி வழி ஆய்வு, உறுதி செய்தல் இல்லாத காலத்தில் இவரின் பொறுப்பு இன்னும் அதிகமாக இருந்தது.

இவர் அடுத்தவருக்கு வாக்கு கொடுத்தவர். ஆக, அந்த வாக்கை அவர் எப்படியாகிலும் காப்பாற்ற வேண்டும்.

அதை எப்படி காப்பாற்ற வேண்டும்?

விரைந்தோடிச் செல்ல வேண்டும்
கையில் காலில் விழுந்தாவது தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும்

ஏனெனில் இவர் வேடன் கையில் அகப்பட்ட மான்போலவும், கண்ணியில் சிக்கிய குருவி போலவும் இருப்பார். எந்நேரமும் இவருக்கு ஆபத்து ஏற்படலாம்.

வங்கியில் லோன் வாங்க சாட்சி கையெழுத்து போடுதல்,

கடவுச் சீட்டு வாங்க சாட்சி கையெழுத்து போடுதல்,

வங்கியில் கணக்கு தொடங்க சாட்சி கையெழுத்து போடுதல்,

திருமண ஒப்பந்தத்தில் சாட்சி கையெழுத்து போடுதல்,

நிலம் வாங்கும் போது, விற்கும் போது சாட்சி கையெழுத்து போடுதல்

என எல்லாமே ஒருவகை பிணைதான்...

வேகமாக பேனாவை எடுத்து விறுவிறு என்று கையெழுத்துபோடுமுன் சற்று யோசிக்கலாமே!

இன்னும் சொல்வேன்...

4 comments:

  1. எத்தனை எத்தனை பயனுள்ள விஷயங்களைத் தன்னுள் அடக்கி வைத்துள்ளது இந்த நீதிமொழிகள் நூல்.....பல விதமான சந்தர்ப்பங்களில் சாட்சிக் கையெழுத்துப் போடப்போய் இரு பக்கமும் பந்தாடப்படுபவர் பற்றிக் கூறுகிறார் தந்தை.நிலம் வாங்கும்போது,விற்கும்போது; வங்கியில் கணக்கு ஆரம்பிக்கும்போது; வங்கியில் லோன் வாங்கும்போது ....இம்மாதிரி சமயங்களில் ஒருவர் சாட்சிக் கையெழுத்து போடுமுன் யோசிக்க வேண்டுமென்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடிகிறது.ஆனால் திருமண ஒப்பந்தத்தில் சாட்சிக் கையெழுத்துப் போடும்போது கூடவா? அங்கு சாட்சிக்கையெழுத்துப் போட அழைக்கப்படுபவருக்கு அது எத்தனை பெரிய மரியாதை? அந்நேரத்தில் கூட ஒருவர் யோசிக்க வேண்டுமெனில் எதை நோக்கிப் பயணிக்கிறது நம் சமுதாயம்? யோசிப்போம்..நாம் ஒருவரை உதவிக்கு அழைக்கும் போதும் சரி...நாம் ஒருவருக்கு உதவி செய்யும்போதும் சரி இரு தரப்பு நேர்மையையும்,நாணயத்தையும் சிறிது சந்தேகம் கலந்த மனத்தோடு அலசுவோம்.இன்றைய நடைமுறைக்குத் தேவை இதுவெனில் அதைச் செய்வதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன்.இதைத்தான் ஆங்கிலத்தில் 'prudence' என்கிறார்களோ! நீதிமொழிகள் நூலின் வாயிலாக நாட்டு நடப்பை இத்தனைத் துல்லியமாக அலசும் தந்தைக்கு ஒரு சபாஷ் போடலாமே!!!

    ReplyDelete
  2. ஐயா வணக்கம் நான் அறிமுகம் இல்லாத ஒருவருக்கு 200000 ரூபாய்க்கு சாட்சி கையெழுத்து போட்டு இருக்க
    மனை பத்திரம் அடகு வச்சி இருக்கு சேல் அக்ரிமென்ட் போட்டு இருக்கு இதனால்
    எனக்கு ஏதாவது சிக்கல் வருமா

    ReplyDelete
  3. கடன் வாங்கிய நபர் கடனை திரும்ப செலுத்தாத பட்சம் எனக்கு ஏதாவது சிக்கல் வருமா

    ReplyDelete
  4. கடன் வாங்கிய நபர் கடனை திரும்ப செலுத்தாத பட்சம் எனக்கு ஏதாவது சிக்கல் வருமா

    ReplyDelete