Wednesday, June 15, 2016

யாவரும் நலம்

புயலில் அலைக்கழிக்கப்பட்ட கப்பல் தரைதட்டி நிற்கின்றது.

சகதியில் சிக்கியதால் கப்பலின் முன்பகுதி அசையாமல் நிற்க, பின்பகுதி அலைகளால் அடித்து உடைக்கப்படுகிறது. கப்பல் உடைந்தால் கைதிகள் தப்பிவிடுவர் என்று நினைக்கின்ற படைவீரர்கள் கைதிகளைக் கொன்றுவிடத் திட்டமிடுகிறார்கள்.

ஆனால், அதிலும் ஒரு நல்லவர் இருக்கிறார். அப்படி கைதிகளைக் கொன்றுவிட்டால் பவுலையும் கொல்ல நேரிடும் என்று சுதாரித்துக் கொள்ளும் நூற்றுவர் தலைவர் அந்த திட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்கின்றார்.

மாற்றுத்திட்டம் ஒன்று உருவாகின்றது.

'நீச்சல் தெரிஞ்சவங்க நீந்தி வந்துடுங்க!'

'தெரியாதவங்க பலகையைப் பிடிச்சு வந்துடுங்க!'

'நாங்க உங்கள நம்புறோம்! நீங்க எங்க நம்பிக்கைக்கு துரோகம் செய்திடாதீங்க!'

கைதிகளும், பவுலும் நீந்திக் கரை சேர்கின்றனர்.

யாரும் தப்பிக்க விரும்பவில்லை - ஆச்சர்யமாக இருக்கிறது.

அதவாது, உயிருக்கு ஆபத்தான நிலையிலும் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்காமல் இருக்கும் இந்த நல்ல மனதை நாம் இந்த கைதிகளிடம் கற்றுக்கொள்ளலாம்.

'நாணயம் என்பது யாரும் உன்னைப் பார்க்காதபோது நீ எப்படி இருக்கிறாயோ என்பதுதான்!'

எல்லாரும் பாதுகாப்பாய் கரை சேர்ந்தார்கள்.

ஆனால், அவர்கள் சேர்ந்த கரை இத்தாலியக் கரை அல்ல. இத்தாலிக்குக் கொஞ்சம் கீழே உள்ள மால்டாவின் கரை.

2 comments:

  1. பவுல் என்ற ஒரு நல்லவரை முன்னிட்டு அனைத்துக் கைதிகளும் உயிர்பிழைத்தால் கூடத் தப்பில்லை என நினைக்கும் நூற்றுவர் தலைவன் , ஒரே ஒரு நீதிமானையேனும் முன்னிட்டு சோதோம் கொமோரா எனும் நகரம் காக்கப்படவேண்டும் என இறைவனிடம் மன்றாடும் தந்தை அபிரகாமை நினைவு படுத்துகிறார்.இங்கே பாராட்டப்பட வேண்டியது கைதிகள் மேல் தான் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்க மாட்டார்கள் என நம்பிய நூற்றுவர் தலைவனின் நல்லெண்ணமா இல்லை தங்களின் உயிரைக் காப்பாற்ற முன் வந்த நூற்றுவர் தலைவனின் நல்லெண்ணம் பொய்த்துவிடக்கூடாது என நினைத்த கைதிகளின் பிரமாணிக்கமா....இரண்டுமே தான்.ஆனாலும் கைதிகள் இங்கே ஒரு படி உயர்ந்து நிற்கிறார்கள் என்பதும் உண்மைதான்.....ஏனெனில் அவர்கள் நாணயத்தின் சாட்சியாகத் தெரிகிறார்கள். அவர்கள் சேர்ந்த கரை வேண்டுமெனில் தவறானதாக இருக்கலாம்; ஆனால் அவர்கள் சேர்ந்த விதம் சரியே! ' 'நாணயத்தின்' இரு பக்கங்களைக் காட்டிய தந்தைக்கு நன்றிகள்! காலை வணக்கங்கள்!!!


    ReplyDelete
  2. Dear Father,Very excellent.

    ReplyDelete