Monday, June 13, 2016

பெலிக்சு

உரோமைக்குச் செல்லும் முதற்கட்டமாக பவுல் ஆளுநர் பெலிக்சு முன் நிறுத்தப்படுகிறார்.

பவுலை வெளியேற்ற இலஞ்சம் எதிர்பார்க்கிறார் பெலிக்சு.

அரசியல் மற்றும் ஆட்சியில் இருப்பவர்கள் காலங்காலமாக ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்.
ஆனால், நேர்வழியையே தேர்ந்து கொள்கிறார் பவுல்.

சீசரிடம் அழைத்துச்செல்லுமாறு வேண்டுகிறார்.

பவுலுக்கு இந்த துணிச்சல் எங்கிருந்து வந்தது?

பவுலின் வார்த்தைகளே இதற்கு விடை:

'கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும்...

தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்.
தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி இருக்கிறார்.
தமக்கு ஏற்புடையோரைத் தம் மாட்சியில் பங்குபெறச் செய்தார்'

(உரோ 8:28, 30)

1 comment:

  1. ஆணி அடித்தாற்போன்ற வார்த்தைகள். அவரை நம்பி இருப்போருக்கு,அவரை அன்பு செய்வோருக்கு ஆவியாரும் துணை நிற்கிறார் எனில் ' நேர் வழியை'த் தேர்ந்தெடுப்பதில் நாம் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்? " தாம் முன் குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்" இவ்வார்த்தைகளே நம் வாழ்க்கையின் மேல்வரிச்சட்டமாக இருப்பின் எத்துணை நலம்! முயற்சி செய்வோம். அழகானதொரு பதிவைத்தந்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete