Tuesday, June 28, 2016

நீதிமொழிகள் - 11

'நல்லார் தம் கால்நடைகளையும் பரிவுடன் பாதுகாப்பர்.
பொல்லாரின் உள்ளமோ கொடுமை வாய்ந்தது.'
(நீமொ 12:10)

ஒருவர் மற்றவரைக் கண்டும் காணாமல் போகும் போக்கு இன்று வளர்ந்து கொண்டே இருக்கிறது. இல்லையா?

பரிவு என்பது இன்னும் எட்டாக்கனியாகி விட்டது. அதற்கெல்லாம் நேரமில்லை என்றும், அதெல்லாம் நேரமில்லாதவர்கள் காட்ட வேண்டியதும் என்றும் கூட ஆகிவிட்டது.

பரிவு என்ற உணர்வு வந்துவிட்டால் அது எல்லா உயிர்களையும் நோக்கி நம்மைக் குனிய வைக்கிறது.

பரிவு இல்லாத உள்ளம் கொடுமை வாய்ந்ததாக இருக்கிறது.

பரிவு இருந்தால் நல்லோர்!

பரிவு அற்றவர் பொல்லார்! என்கிறார் ஆசிரியர்.

இன்னும் சொல்வேன்...

2 comments:

  1. " பரிவு".. இந்த வார்த்தையை உள்ளத்தினின்று உணர்ந்து ஒரு முறை சொல்லிப்பார்த்தால் நமக்கே ஒரு சாந்தம் கிடைக்கும். மனித மனங்கள் இயந்திரமாகிப் போன இந்நாட்களில் மனிதனுக்கு அடுத்தவனைப்பற்றி நினைக்கவே நேரமில்லை.அப்புறம் எங்கே பரிவு காட்டுவது? இன்றையப்பொழுது யாராவது ஒருவருக்கு ஒரு பரிவை வெளிப்படுத்தும் நற்செயலைப் புரியலாமே! அழகாகச் சொல்கிறார் தந்தை....."பரிவு எனும் உணர்வு வந்துவிட்டால் அது எல்லா உயிர்களையும் நோக்கி நம்மைக் குனிய வைக்கிறது" என்று.இதை நாமும் உணர்ந்து பார்க்கலாமே! நல்லதைச்
    செய்வோம்; அதை இன்றே செய்வோம். சொல்லாமல் சொல்லும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete