Monday, June 6, 2016

நெஞ்சம்நிறை நன்றியோடு

என் பணி மற்றும் படிப்பு முடிந்து நாளை தாயகம் திரும்புகிறேன்.
'நன்றி' என்ற ஒற்றைச்சொல்தான் என் உள்ளத்திலும், உதட்டிலும் இருக்கிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை ஆயராகக் கொண்ட உரோமைத் மறைமாவட்டத்திலேயே அருள்பணியாளராகப் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு, என் குருமாணவ நாட்களில் என் கனவான பாப்பிறை விவிலிய நிலையத்தில் முதுகலைப் படிப்பு, புதிய முகங்கள், புதிய உணவுமுறை, புதிய உறவுகள், புதிய அறிமுகங்கள் என நினைத்து நன்றி கூற நிறைய மனத்தில் இருக்கின்றன.

'நீங்கள் உழுது பயிரிடாத நிலத்தை நான் உங்களுக்குத் தருவேன்.
நீங்கள் கட்டாத நகரத்தில் உங்களைக் குடியேற்றுவேன்.
நீங்கள் விதைத்து வளர்க்காத திராட்சைக் கனிகளையும், ஒலிவக் காய்களையும் உண்பீர்கள்.
இந்த ஆண்டுகளில் உங்கள் மேலாடை நைந்து போகவில்லை.
உங்கள் பாதங்கள் வீங்கவில்லை'

என்னும் யாவே இறைவனின் வாக்குறுதி என் வாழ்வில் நிறைவேறியதாக உணர்கிறேன்.

இந்த நான்கு ஆண்டுகளில் நான் கற்ற வாழ்க்கைப் பாடங்களைப் புத்தகமாகப் பதிவு செய்ய ஆவலாக இருக்கிறேன்.

என் பயணம், பணி சிறக்க தொடர்ந்து என்னை வாழ்த்துங்கள். ஆசீர்வதியுங்கள்.

விரைவில் சந்திப்போம்.

நன்றி.

3 comments:

  1. நான்கு ஆண்டுகளுக்கு முன் இளம் குருவாக உரோமை நகர் சென்று எடுத்த குறிக்கோளில் சிறிதும் பிசகாமல் தங்கள் படிப்பையும் (அதுவும் ஒரே கல்லில் இரு மாங்காய்களாக), பங்குப்பணியையும் இனிதே முடித்து மதுரை மண்ணுக்கும், உயர்மறைமாவட்டத்திற்கும் பெருமைசேர்த்த மகனாகத் தாயகம் திரும்பும் தந்தை யேசு கருணா அவர்களை இந்த வலைப்பதிவு வாசகர்கள் அனைவரின் பெயரால் வரவேற்கிறேன். தங்களை நினைக்கையில் எங்கள் உதடும்,உள்ளமும் சொல்லும் ஒரே வார்த்தை கூட 'நன்றி' தான்.நன்றி ...தங்களுக்கும்,தங்களை இம்மண்ணுக்குத் தந்த பெற்றோருக்கும், தங்களை இந்நாள் வரை கரம் பிடித்து வழி நடத்திய ஆண்டவனுக்கும்!யாவே இறைவனின் வாக்குறுதி தங்கள்வாழ்வில் நிறைவேறியதாகத் தாங்கள் எடுத்துக்காட்டியிருக்கும் வரிகள் தங்களின் உள்ளக்கிடக்கையை வெள்ளிடைமலைபோல் பிரதிபலிக்கின்றன.கண்டிப்பாகத் தங்களின் பயணத்தையும்,பணிவாழ்வையும் இறைவன் தொடர்ந்து ஆசீர்வதிக்கவும், தங்களை அவரின் வார்த்தைகளை இவ்வையகத்துக்கு எடுத்துரைக்கும் கருவியாகப் பயன்படுத்துவும் வாழ்த்துகிறோம்! ஆசீர்வதிக்கிறோம்!! தாங்கள் கரம் பதிக்கும் அனைத்துமே இறைவனின் மகிமையை எடுத்தியம்பட்டும்!!! அன்புடனும்.....ஆசீருடனும்......

    ReplyDelete
  2. Amen.. Hallelujah!!!
    Bon voyage !!
    Happy Vacation !

    ReplyDelete