Friday, June 17, 2016

உரோமை

மால்தாவில் இருந்து புறப்படும் பவுலின் பயணம் உரோமையில் நிறைவடைகிறது.

'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவியுங்கள்' என்ற இயேசுவின் கட்டளை இங்கு நிறைவேறுகிறது. ஏனெனில், 'உலகின் எல்லையை அடைவது' என்பது 'உரோமையை அடைவதுதான்' என்று கருதப்பட்டது.

'முழுத்துணிவோடு தடையேதுமின்றிக் கற்பித்துக் கொண்டிருக்கிறார்' பவுல்.

இனி தடையேதுமில்லை!

1 comment:

  1. தன்னைச் சுற்றியிருந்த அத்தனை இயற்கை மற்றும் மனித எதிரிகளின் அனைத்து சதிச் செயல்களையும் முறியடித்து,இறைவனின் உடனிருப்பு ஒன்றையே நம்பி,அவரின் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் புகட்டித், தன் பயணத்தை பவுல் வெற்றிகரமாக முடிக்கும் விதத்தைச் சொல்கிறது இன்றையப் பதிவு. கண்டிப்பாக இது முடிவல்ல; பவுலின் வழிவந்த அனைத்து திருச்சபை அங்கத்தினர்களும் தொடர்ந்து செய்ய வேண்டிய ஒரு பணி; ஒரு பயணம். இன்றும் அதை முழுத்துணிவோடு தடையேதுமின்றி கற்பித்துக்கொண்டிருக்கும் அனைவரோடும் உடனிருந்து இன்றும் திருஅவையும்,திருமறையும் காக்கப்பட ஒரு தூணாய் நிற்கிறார் என்று நம்புவோம்.
    தன்னுடைய அனைத்து சமயப்பணிகள் மற்றும் சமுதாயப்பணிகளுக்கிடையிலும் திருத்தூதர் பணிகள் 28 அதிகாரங்களையும் தங்கு தடையின்றி தனக்கேயுரித்தான நடையில் கொடுத்த தந்தைக்கு நன்றிகள்! இறைவனின் உடனிருப்பு என்றும் தங்களுக்குத் துணை வருவதாக!!'

    ReplyDelete