Monday, May 30, 2016

துரோவா

பவுலின் இரண்டாம் தூதுரைப் பயணத் தொடக்கத்தில் பவுல்-சீலா-திமொத்தேயு என மூவர் இருந்தாலும், இவர்களோடு லூக்காவும் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இரண்டாம் தூதுரைப் பயணத்தில் உள்ள கதையாடல்களில், 'நாங்கள் சென்றோம்,' 'நாங்கள் தங்கினோம்' என்று தன்மை பன்மையில் எழுதுகின்றார்.

திருத்தூதர்கள் ஆசியா, பித்தினியா போன்ற பகுதிகளுக்குச் செல்ல விரும்புகின்றனர் (காண். திப 16:6-10). ஆனால், இயேசுவின் ஆவியார் அவர்களைத் தடுக்கின்றார். ஆக, அவர்கள் துரோவா செல்கின்றனர். மேலும், துரோவாவில் ஒரு காட்சி கண்டு, மாசிதோனியாவுக்குச் செல்கின்றனர்.

இங்கே இரண்டு விடயங்கள் கவனிக்க வேண்டியவை:

அ. தூய ஆவியார், 'அங்கே போகக்கூடாது!' என்று தடுக்கின்றார்
ஆ. கனவில் 'இங்கே வாங்க!' என்று அழைக்கப்படுகிறார்கள்

அதாவது, முழுக்க முழுக்க தூய ஆவியானவரின் உடனிருப்பையும், தங்களுக்கு வரும் கனவுகள் மற்றும் காட்சிகளையும் அறிந்தவர்களாக இருக்கின்றனர்.

உள்ளுணர்வு (intuition) கொண்ட ஒருவரால்தான் இந்த இரண்டையும் உணர முடியும்.

காலங்காலமாக கனவுகள் நமக்கு மறைபொருளாகவே இருக்கின்றன.

என்ன நடந்தாலும், 'கடவுளின் தீர்மானம் என்ன?' என்பதை உணர்ந்து அதன்படி நடக்கின்றனர் திருத்தூதர்கள்.

3 comments:

  1. " கனவு"... இது விவிலியத்தில் முதல் ஏற்பாட்டிலும் சரி,இரண்டாம் ஏற்பாட்டிலும் சரி, பொருள் செறிந்த வார்த்தை. பிதாப்பிதாவான யாக்கோபானாலும், உலக மீட்பரின் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சூசையானாலும் அவர்களுக்கு இறைவனின் திருவுளம் உணர்த்தப்பட்டது கனவின் மூலம் தான். தூய ஆவியானவரின் உடனிருப்பை அவர்கள் அறிந்திருந்த காரணத்தால் கனவில் அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட விஷயங்களையும் சிரமேற்கொண்டு நிறைவேற்றினர். இன்றையத் தலைமுறையினர் நாம் எப்படி இறைவனின் திருவுளத்தை அறிய முற்படுகிறோம்? அது 'இங்கி பிங்கி பாங்கி' அளவில் இருக்கிறது என்பதே உண்மை.எது வரினும் இறைவனின் எண்ணமறிந்து நடப்பவருடன் மட்டுமே இறைவனும் பல வழிகளில் தன்னை வெளிப்படுத்துகிறார். நமக்கென்ன வழி என நாம் தான் அறிய முற்பட வேண்டும். புரிந்து கொள்ள சிறிது சிரமம் இருப்பினும், நல்லதொரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Oh... the early christians were so close in doing exactly what the Holy Spirit wanted....

    ReplyDelete
  3. Oh... the early christians were so close in doing exactly what the Holy Spirit wanted....

    ReplyDelete