Monday, May 30, 2016

திமொத்தேயு

கடவுள் ஒரு கதவை அடைத்தால், இரண்டு கதவுகளைத் திறந்துவிடுவார் என்ற வாக்கு பவுலின் வாழ்வில் உண்மையாகிறது.

தன்னை திருத்தூதர்களுக்கு அறிமுகம் செய்த, தன் முதல் தூதுரைப் பயணத்தில் உடனிருந்த உற்ற தோழன் பர்னபா அவரிடமிருந்து பிரிய நேரிட்டது.

அந்தப் பிரிவை, வருத்தத்தை கடவுள் உடனே ஈடுசெய்கிறார்.

தன் அன்பு பிள்ளையான திமொத்தேயு பவுலுக்கு அறிமுகம் ஆகிறார் (காண். திப 16:1-5)

பவுல் திமொத்தேயுவின் மேல் கொண்டிருந்து அளவுகடந்த அன்பிற்கு அவர் அவருக்கு எழுதிய கடிதங்களே சான்று.
திமொத்தேயுவின் தாய் யூதர். தந்தை கிரேக்கர்.

இரண்டு பின்புலங்களில் இருந்து வருபவர்கள் வாழ்வில் பரந்த மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இரண்டு உலகங்களுக்கு, இரண்டு மதங்களுக்கு, இரண்டு சிந்தனைகளுக்கு அறிமுகம் ஆனவர்கள். ஒன்றைவிட இரண்டு பெரிதுதானே.

தகுந்த நேரத்தில் தகுந்த நபரை அறிமுகம் செய்வது இறைவனின் திருவிளையாடல்களில் ஒன்று.

2 comments:

  1. "கடவுள் ஒரு கதவை அடைத்தால் ஒரு ஜன்னலையாவது திறப்பார்"
    எனக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் ஒரு கதவுக்குப்பதில் இரு கதவுகளைத் திறப்பார் என்பது கடவுளின் தாராள உள்ளத்தை மட்டுமல்ல, தந்தையின் தாராள உள்ளத்தையும் காட்டுகிறது. நண்பன் பர்னபாவை இழந்த பவுலுக்கு அன்புப்பிள்ளையாக ' திமோத்தேயு'வைத்தருகிறார் இறைவன். திமோத்தேயுவுக்கு அவர் எழுதும் மடல்களில் ' என் அன்புப்பிள்ளாய் திமோத்தேயுவிற்கு' எனப் பாசத்துடன் அவர் விளிப்பது நம்மையே அழைப்பது போலிருக்கும்." இரண்டு பின்புலங்களில் இருந்து வருபவர்கள் வாழ்வில் பரந்தமனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்கள் இரண்டு உலகங்களுக்கு,இரண்டு மதங்களுக்கு,இரண்டு சிந்தனைகளுக்கு அறிமுகம் ஆனவர்கள்" ஆமாம் தந்தையே! கண்டிப்பாக ஒன்றைவிட இரண்டு பெரிதுதான்..ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம் தான்."அங்கைப் புண்ணுக்கு ஆடியும் வேண்டுமா என்ன?"அழகான,அன்பானதொரு பதிவிற்காகத் தந்தைக்குப் பாராட்டு!!! அனைவருக்கும் இந்த வாரம் இனியதொரு வாரமாக அமைந்திட வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. I had always wondered why God allowed barnabas to leave paul...i found its answer today.... thanks...

    ReplyDelete