பவுல் மற்றும் பர்னபா லிஸ்திராவில் செய்த பணியை திப 14:8-20ல் வாசிக்கின்றோம்.
லிஸ்திராவில் பிறவியிலேயே கால் ஊனமாக இருந்த ஒருவர் பவுலின் போதனையை ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரின் ஆர்வத்தைக் கண்ட பவுல் அவருக்கு நலம் தருகின்றார். கால் ஊனமுற்றிருந்த அந்த நபர் துள்ளி எழுந்து நடந்ததைக் கண்ட லிஸ்திரா மக்கள், 'தெய்வங்களே மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன,' என்று சொல்லி பர்னபாவை சேயுசு என்றும், பவுலை எர்மசு என்றும் தங்கள் தெய்வங்களின் பெயர்களைக் கொண்டு அழைக்கின்றனர். அத்தோடு விட்டார்களா? அர்ச்சகர்களைக் கூட்டிக் கொண்டு வந்து அவர்கள் முன் பலியிடவும் தொடங்குகின்றனர். இதைக் கண்ட பவுல் மிரண்டு போய், 'நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்!' என்று அவர்களைச் சாந்தப்படுத்துகின்றார்.
ஆனால். கொஞ்ச நேரத்தில் இதே மக்களின் மனம் மாறுகின்றது.
இக்கோனியாவிலிருந்து வந்திருந்த யூதர்களின் பேச்சைக் கேட்டு பவுல் மேல் கல் எறிகின்றனர். அவர் இறந்துவிட்டதாக நினைத்து வெளியே தூக்கிப் போடுகின்றனர். ஆனால் பவுல் எழுந்து செல்கின்றார்.
'சட்டென்று மாறும் வானிலை போல' மாறுகின்றது லிஸ்திராவின் மக்கள்.
பிளவுபட்ட உள்ளம், அல்லது இருமனம், அல்லது உறுதியற்ற மனம் இறைவனால் அதிகம் கடிந்து கொள்ளப்படுகிறது.
நம் மனம் உறுதியற்று இருப்பதற்குக் காரணம், நாம் நம் உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுவதுதான். நம் மனதில் ஒவ்வொரு நொடியும் ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைகின்றன. இப்படி மின்னல் போல தோன்றும் உணர்வுகள் நாம் கொண்டிருக்கின்ற மதிப்பீடுகளை மாற்றும் வலிமை கொண்டிருந்தன என்றால், நம் உள்ளமும் பிளவுபட்டே இருக்கின்றது.
ஒன்றை தேர்ந்து தெளியவும், தேர்ந்து தெளிந்தபின் அதில் நிலைத்து நிற்கவும் உறுதி கொண்டிருந்தால் எத்துணை நலம்!

" கேப்பையில் நெய் வடியுதென்றால் கேட்பாருக்கு புத்தி எங்கே போச்சு?".. என்ற பழமொழிக்கேற்ப, கால் ஊனமான ஒருவனைசுகப்படுத்தியபவுல்மற்றும்பர்னபாவை தெய்வங்களுக்குச் சமமாக வைத்துக் கொண்டாடிய லிஸ்திரா மக்கள்,இக்கோனியா மக்களின் பேச்சைக் கேட்டு மனம்மாறி அவர்களைத்
ReplyDeleteதுன்புறுத்தவும்,பவுல் மேல் கல்லெறியவும்செய்வதாகககூறுகிறது இன்றையப்பதிவு.." உறுதியற்ற அல்லது ஸ்திரத்தன்மை" யற்ற உள்ளம்
இறைவனால் கடிந்து கொள்ளப்படுவதாக எடுத்துரைக்கிறார் தந்தை.ஒரு முறை நமக்கு " சரி" யென தேர்ந்து தெளிந்த ஒரு விஷயத்தை எக்காரணத்திற்காகவும் யாருக்காகவும் விட்டுக்கொடாமல் அதில் நிலைத்து நிற்பதே விவேகம் எனக்கூறுகிறது திருத்தூதர் பணிகள்.வாழும் வாழ்க்கைக்கு ஆதாரமான, பல முத்தான விஷயங்களைத் தினம் ஒன்றாகத் " திருத்தூதர் பணி"களிலிருந்து பொறுக்கி எடுத்துத் தரும் தந்தையை எத்தனை பாராட்டினாலும் தகும்.ஆண்டவன் அருள் தங்களுக்கு அபரிமிதமாகக் கிடைக்க வாழ்த்துக்கள்!!!