எருசலேம் சங்கத்தில் எடுக்கப்பட்ட முடிவு அந்தியோக்கியா நகர மக்களுக்கு யூதா மற்றும் சீலா வழியாக அறிவிக்கப்படுகிறது (காண். திப 15:30-35)
தகவல் தொழில்நுட்பம் கடித பரிமாற்றங்களை மட்டுமே நம்பியிருந்த காலத்தில், கடிதங்களைக் கொண்டு செல்பவர்கள் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இருந்தது. அத்தகைய பிரமாணிக்கம் கொண்டிருந்தவர்கள் யூதாவும், சீலாவும். தொடக்க காலத்தில் இந்த சீலா என்ற பெயரை பெண்ணின் பெயர் என நினைத்தேன். சைலஸ் என்பதையே சீலா என்று மொழிபெயர்த்துள்ளார்கள். இங்கே இது ஓர் ஆணின் பெயரே.
யூதாவும், சீலாவும் அந்தியோக்கியா மக்களைக் கூட்டி கடிதத்தை வாசித்து அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கின்றனர். மக்களும் ஊக்கம் அடைகிறார்கள்.
இந்த ஆறு வசனங்களில் 'ஊக்கம்' என்ற வார்த்தை இரண்டு முறை பயன்படுத்தப்படுகிறது.
யார் ஊக்கம் கொடுக்க முடியும்?
துள்ளலாக ('enthusiastic') இருக்கக்கூடிய ஒருவரே ஊக்கம் கொடுக்க முடியும்.
'Enthusiasm' என்ற ஆங்கில வார்த்தை 'en' மற்றும் 'theos' என்ற இரண்டு கிரேக்க வார்த்தைகளிலிருந்து வருகிறது. இதன் அர்த்தம் 'கடவுளுக்குள் இருப்பது.'
ஆக, கடவுளுக்குள் இருக்கும் நபர் இயல்பாகவே மற்றவருக்கு ஊக்கம் கொடுக்கிறார். இத்தகையை நபருக்கு எல்லாமே நேர்முகமாகவே தெரியும்.
இன்று நமக்கு அதிகம் ஊக்கம்தான். நம்மை யாராவது ஊக்கப்படுத்தமாட்டார்களா என அன்றாடம் ஏங்குகின்றோம்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தரும் ஊக்கம் அவர்களின் சாதனையாக மாறியிருக்கிறது என்பதை கடந்த வாரம் மாணவர்களின் தேர்வு முடிவுகளில் பார்க்கின்றோம்.
வாக்காளர்கள் தந்த ஊக்கம் இன்று நம் முதல்வரை பரந்த நோக்கத்தோடு அனைத்தையும் பார்க்கத் தூண்டுகிறது.
ஊக்கம்...சின்ன நெருப்புப்பொறி போல. அதை நாம் அவர்களுக்குக் கொடுத்தால் அவர்கள் வாழ்வும் பிரகாசமாகிவிடும்.
யூதா, சீலா - ஊக்கம்

" ஊக்கம்" வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் " டானிக்". இது கிடைத்தவர்கள் வாழ்க்கைப்படிக்கட்டுகளின் உயரத்திலிருப்பதையும்,கிடைக்காத வர்கள் அடித்தட்டில் இருப்பதையும் நாம் காண்பது அன்றாடம் நமக்குப் பரிட்சயமானதொரு விஷயம். இன்று நான் என் வாழ்க்கைப் பயணத்தை சுய ஆய்வுக்குட்படுத்தினால் என்னைத் தூக்கிவிட்ட ' யூதாக்களும்', 'சீலாக்களும்' எண்ணிலடங்காதோர். அதே அளவுக்கு என்னால் யாரையேனும் தூக்கிவிட முடிந்துள்ளதா? ஆசிரியர் மாணாக்கருக்குத் தரும் ஊக்கம் அவர்களின் சாதனையாக மாறியுள்ளதெனில், வாக்காளர் தந்த ஊக்கம் இன்று நம் முதல்வருக்கு பரந்த நோக்கை கொடுத்துள்ளதெனில் நம்மைச் சுற்றியுள்ளோருக்கு நாம் தரும் ஊக்கம் எத்தனையோ வித்தைகளைச் செய்யலாமே! காசா..பணமா... ஏன் தயக்கம்? இன்றே மாறுவோம் சீலாக்களாகவும், யூதாக்களாகவும். நல்லதொரு பதிவை மட்டுமின்றி,சீலா என்பது ஒரு பெண்ணின் பெயரல்ல என்பதையும்,'Enthusiasm 'என்ற வார்த்தையின் அர்த்தம் 'கடவுளுக்குள் இருப்பது' என்ற செய்தியையும் 'போனஸாக'க் கொடுத்த தந்தைக்கு நன்றிகள்! பாராட்டுக்கள்!!!
ReplyDelete