'கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன்' (திப 10:34-48)
கொர்னேலியுவின் இல்லத்திற்கு வருகின்ற பேதுரு அவர்கள் முன் உரையாற்றுகின்றார்.
திருத்தூதர்கள் பணி செய்த நாட்களில் ஒவ்வொரு நாளும் அவர்கள் மற்றவர்கள் மேல் தாக்கத்தை ஏற்படுத்தும் அதே அளவிற்கு அவர்களும் வளர்கிறார்கள்.
குறிப்பாக, கொர்னேலியுவின் இல்லத்தில்தான் பேதுரு 'ஆள்பார்த்துச் செயல்படாத தன்மையை' (impartiality) கற்றுக்கொள்கின்றார்.
காலங்காலமாக அருள்பணி நிலை வாழ்வில் இருப்போரையும், நம் கத்தோலிக்கத் திருச்சபையையும் ஆட்டுவிக்கும் ஒரு சோதனை 'ஆள்பார்த்து செயல்படுதல்' (partiality or favouritism) அல்லது 'சொந்தங்களுக்குச் சார்பாகச் செயல்படுதல்' (nepotism).
இப்படிச் செய்கின்ற போது நம் பார்வை சுருங்கி விடுகிறது.
ஒரு குதிரை தன் போக்கில் வேகமாக சென்று கொண்டிருக்க கடிவாளமும், கண்பட்டையும் தேவைப்பட்டாலும், இந்தக் கடிவாளமும், கண்பட்டையும் குதிரையின் பார்வையைச் சுருக்கி விடுகிறது.
பார்வை சுருங்கி விட்டால் நம் எண்ணமும் சுருங்கிவிடுகிறது. எண்ணம் சுருங்கிவிட்டால் நம் ஏற்றுக்கொள்ளுதலும் சுருங்கிவிடுகிறது.
பேதுரு மற்றும் அவரின் உடனிருந்தவர்களும் சுருங்கிய மனத்தையே கொண்டிருக்கின்றனர். ஆகையால்தான் புறவினத்தார்மேல் - விருத்தசேதனம் செய்யாதவர்மேல் - தூய ஆவி இறங்கி வருவதைக் கண்டு மலைத்துப் போகின்றனர்.
பேதுரு இன்று பெரும் ஞானம் அவரின் ஒட்டுமொத்த திருப்பணியையும் மாற்றிப் போடுகின்றது.
தன் சபைக் கண்காணிப்பாளர்களாக இருக்கும் திமொத்தேயு, தீத்துவுக்கு, தூய பவுலும் இந்தப் பரந்த உள்ளத்தையே முதன்மை மதிப்பீடாக முன்மொழிகின்றார்.

"ஒரு குதிரைத் தன் போக்கில் வேகமாகச் சென்று கொண்டிருக்கக் கடிவாளமும், கண்பட்டையும் தேவைப்பட்டாலும் ,இவை குதிரையின் பார்வையைச் சுருக்கி விடுகிறது.பார்வை சுருங்கும் போது எண்ணமும்,எண்ணம் சுருங்கும் போது நம் ஏற்றுக்கொள்ளுதலும் சுருங்கி விடுகிறது." இந்தக்கூற்று குதிரையின் விஷயத்தில் எத்தனை உண்மையோ, அதை விடப் பன்மடங்கு மனிதனின் விஷயத்தில் உண்மையாகிறது." ஆள் பார்த்து செயல்படுதல்" என்பது திருச்சபையை மட்டுமின்றி எல்லாத் தரப்பினரையுமே ஆட்டுவிக்கும் ஒரு சாபக்கேடு. எல்லாத் தகுதியுமிருந்தும் ஒருவன் நிராகரிக்கப்படுவதும்,தகுதியற்ற ஒருவன் ஆள் பலத்தை வைத்து உயரங்களைத் தொடுவதும் மன்னிக்க முடியாத கொடுமை.இதனாலேயே பலர் வாழ்வில் வெம்பிப்போவதும்,அவர்கள் வாழ்க்கை ஓரங்கட்டுப்படுவதும் நாம்
ReplyDeleteஅன்றாடம் காணும்,கேட்கும் நிகழ்வாகிவிட்டது." இறைவன் ஆள் பார்த்து செயல்படுவதில்லை" எனும் உண்மையை உணர்பவர்கள் மட்டுமே இதிலிருந்து விடுபட இயலும். அன்று பேதுருவுக்குக். கிடைத்த ஞானமும்,திமோத்தேயு,தீத்து இவர்களுக்கு கிடைத்த பரந்த உள்ளமும் நம் திருச்சபையை ஆள்வோருக்கு பொழியப்பட வேண்டுமென்று தூய ஆவிய்யைத் துணைக்கழைப்போம்.தக்க நேரத்தில் கொடுத்த தகுதி வாய்ந்த பதிவிற்காகத் தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!