Saturday, May 14, 2016

மத்தியா

அதன்பின் அவர்கள் சீட்டுக் குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார். (திப 1:26)

இன்று (மே 14) திருத்தூதர் மத்தியாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

யூதாசு இஸ்காரியோத்துவின் இடத்தை நிரப்ப திருத்தூதர்களால் தெரிவு செய்யப்பட்டவர் மத்தியா.

'மத்தியா' என்றால் 'கடவுளின் கொடை' அல்லது 'கடவுளால் கொடுக்கப்பட்டவர்' என்பது பொருள். இவரைப்பற்றிய வரலாற்று குறிப்பு திருத்தூதர் பணிகள் நூல் தவிர (காண். 1:12-26) வேறெங்கும் இல்லை. 'மத்தியாவின் நற்செய்தி' என்ற ஒரு ஏற்றுக்கொள்ளப்படாத நூலும் உள்ளது.

இரண்டு பேர் முன்னிருத்தப்படுகிறார்கள்: 'பர்சபா' மற்றும் 'மத்தியா'

இவர்களில் சீட்டு மத்தியா பேருக்கு விழுகின்றது.

இவர் அதிர்ஷ்டக்காரர்.

'திருவுளச்சீட்டு' எடுப்பது என்பது யூத மரபில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் ஒன்று. குறிப்பாக, நீதித்தலைவர்களின் காலத்தில் போருக்குச் செல்லுமுன் திருவுளச்சீட்டு போட்டு பார்க்கும் வழக்கம் இருந்தது. இறைவாக்கினர்கள் இல்லாத காலத்தில் திருவுளச்சீட்டு முறைதான் நடைமுறையில் இருந்தது.

மேலும் தலைமைக்குருவின் மார்பில் இருந்த பொன்பட்டையில் 'யூரிம்,' 'தும்மிம்' என்ற இரண்டு தாயக்கட்டைகள் இருந்தன. அவற்றை வைத்தும் பிற்காலத்தில் இறைவனின் திருவுளம் அறியப்பட்டது.

இறைவனின் திருவுளத்தை இன்று நாம் எப்படி அறிவது?


3 comments:

  1. சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் நேரங்களில், மனக்குழப்பம் மேலோங்கி நிற்கும் வேளைகளில் இறைவனின் திருவுளத்தைத் தெரிந்து கொள்ளப் பொதுவாக விவிலியத்தின் பக்கங்களைத் துணைக்கழைப்பது நம்மில் பலருக்கு பழக்கப்பட்ட விஷயம். யூத மரபிலிருந்த இந்தத் ' திருவுளச்சீட்டுப் பழக்கத்தை' இக்கால 'அறிவாளிகள்' ' குருட்டு நம்பிக்கை' எனும் பெயரால் புறந்தள்ளுவதையும் பார்த்திருக்கிறோம்.அவரவரவருக்கு எது வசதியோ, தம் உள்மனது எதைச் சொல்கிறதோ.. அதன்படி செய்வதில் தப்பில்லை என்றே எண்ணுகிறேன்.இன்றையப் பதிவில் இந்தத் திருவுளச் சீட்டை விட என் மனதுக்கு நெருக்கமாகப் படுவது யூதாசின் இடத்திற்கு ' மத்தியாஸ்' தேர்ந்தெடுக்கப்படுதலே! ''பர்சபா', 'மத்தியா' ...இருவரில் முன்னவர் விடப்படுகிறார்; பின்னவர் தெரிந்துகொள்ளப்படுகிறார். எனவே நம்மைப் பெயர் சொல்லி அழைப்பவர்; நம்மைத் ' தெரிந்து கொள்பவர்' இறைவன்.வாழ்க்கையின் பல சூழல்களில், பலவிதமான முறைகளில் நாம் இறைவனால் அழைக்கப்படும் போது நம் மனநிலை சொல்லும் பதில் என்ன? 'ஆம்' என்றால் இறைவனுக்கு நன்றி சொல்வோம்; பதில் வேறு விதமெனில் நம்மை மாற்றிக்கொள்வோம். நாமும் கூட பலருக்கு 'கடவுளின் கொடையாகும் ' வித்தையை இறைவனிடம் கேட்போம்.தந்தைக்கு என் வணக்கங்கள்!!!

    ReplyDelete
  2. Dear Fr. KARUNANIDHI:

    Your ending statement in today's blog triggers so many thoughts in me, "How shall I know God's Holy Will for my life today"...It is indeed a lifetime of search, seek and knock for a believer...

    I was wondering. Peter and company could have very well left the vacancy that fell by the death of Judas unfilled. What was the compulsion of adding one more ASAP?

    If one argues that Number 12 was of sacred origin and historically nonnegotiable, I wonder how is that the Contemporary Church breaks the Tradition and appoints "so many apostles" as Bishops all over the world?

    More importantly, if casting lot is a authentic cultural reading of the Lord's will, I do rejoice that this methodology is followed at the Vatican to elect a Pope...An extremely human manner of knowing God's mind. I am imagining the amount of "mess" that might go on behind the curtain.

    If the above mode is legitimate to identify the most high calling [in the hierarchy], why not use the same mode in greater degree and in more extended manner to elect and select, pray over and appoint positions as Bishops, Parish Priests etc. locally?

    ReplyDelete