Thursday, December 7, 2017

அருள் நிறைந்தவர்

நாளைய (8 டிசம்பர் 2017) நற்செய்தி: அருள் நிறைந்தவர்

நாளை கன்னி மரியாளின் அமல உற்பவப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். 'சாந்த்தா இம்மாகொலாத்தா' என்று இத்தாலியில் கொண்டாடப்படும் இந்நாளில்தான் எல்லா வீடுகளிலும், தெருக்களிலும் கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டங்களுக்கான தயாரிப்புக்கள் நடைபெறும். 

அமல உற்பவம் தயாரிப்பின் நாள்.

தன் மகனை இவ்வுலகிற்கு அனுப்ப அன்னை மரியாளை கடவுள் தயாரிக்கும் நாள்.

தயாரிப்பு இரண்டு நிலைகளில் நடந்தேறுகிறது: ஒன்று, தயாரிப்பு என்பது இறைவன் அன்னை மரியாளுக்குக் கொடுக்கும் கொடை. இரண்டு, தயாரிப்பு என்பது அன்னை மரியாளின் சரணாகதி செயல். ஆக, கொடையும் செயலும் இணைந்து செல்லும் நாள் இந்நாள்.

'உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது' என வானதூதர் மரியாளிடம் மொழிகின்ற இடத்திலேயே அன்னை மரியாளின் அமல உற்பவம் அழகாக புரிந்துவிடுகிறது.

'நாமே அமல உற்பவம்' என்று தன்னை லூர்து நகரில் வெளிப்படுத்தினார் மரியாள்.

நாம் ஒவ்வொருவருமே ஏதோ ஒரு நோக்கோடு படைக்கப்பட்டு இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டவர்கள்தாம். இறைமகனை நம் வயிற்றில் தாங்கும் பாக்கியம் இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால், நாம் வாழும் அனைத்தும் பாக்கியமே என்பதை தன் வாழ்க்கையால் நமக்கு உணர்த்திவிட்டார் மரியாள்.

1 comment:

  1. இறைவன் அன்னை மரியாளுக்குக் கொடுத்த 'தயாரிப்பு' எனும் கொடையும்,அன்னை மரியாளின் 'சரணாகதி' எனும் செயலும் இணைந்து செல்லும் நாளே நாளைய தினம் நாம் கொண்டாடப்போகும் "அமல உற்பவத் திருநாள்".அழகாக வெளிப்படுத்தி விட்டார் தந்தை.இறைமகனை சுமக்கும் பாக்கியம் நமக்கு இல்லாமற் போயிருக்கலாம்.....ஆனால் ஏதோ ஒரு நோக்கத்தை நாம் சுமந்து வாழவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை மட்டும் உணர்ந்தோமெனில் நாம் வாழும் நாட்கள் அனைத்தும் பாக்கியமே! இதைத் தன் வாழ்க்கையால் வெளிப்படுத்திய அன்னை மரியாள், இதைத் தன் வார்த்தைகளால் வெளிப்படுத்திய தந்தையையும்,நம்மையும் ஆசீர்வதிப்பாளாக! அனைவருக்கும் "அமல உற்பவத்" திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete