Wednesday, December 13, 2017

மனிதராய் பிறந்தவர்களுள்

நாளைய (14 டிசம்பர் 2017) நற்செய்தி (மத்தேயு 11:11-15): மனிதராய் பிறந்தவர்களுள்

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றின் கதாநாயகன் 'திருமுழுக்கு யோவான்' என்பதால்
இன்றிலிருந்தே வாசகங்களின் கண்கள் திருமுழுக்கு யோவானை நோக்கித் திரும்புகின்றன.
திருமுழுக்கு யோவானைப் பற்றி இயேசு தரும் சான்றை நாம் இந்த நற்செய்தி வாசகத்தில் வாசிக்கின்றோம்:

'மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விட பெரியவர் எவரும் தோன்றியதில்ல'
'மனிதராய் பிறந்தவர்களுள்' அல்லது 'பெண்ணிடம் பிறந்தவர்களுள்' என்பது ஒரு சொல்லாடல் - அதாவது, 'இவரைப் போல எவரும் இல்லை' என்ற மிகைப்படுத்துதலுக்குப் பயன்படுத்தப்படும் சொல்லாடல்.

அப்படி என்ன ஒரு பண்பு திருமுழுக்கு யோவானைப் பெரியவராக்குகிறது? என்று யோசித்தால், அதற்கான விடை நற்செய்தி வாசகத்தின் இறுதியில் இருக்கிறது. அது என்ன? 'கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்'

கிறிஸ்து பிறப்பு நிகழ்வில், கிறிஸ்து பிறப்பதற்கு முன் வானதூதர் இருவரிடம் பேசுகின்றார்: சக்கரியா மற்றும் மரியாள் - இங்கே யோசேப்பின் கனவு நிகழ்வுகளை விட்டுவிடுவோம்.
திருமுழுக்கு யோவானின் தந்தையாகிய சக்கரியாவிடம் பேசுகின்றார் வானதூதர்.
மரியாளிடம் பேசுகின்றார் வானதூதர்.

குழந்தையைப் பற்றிய எல்லாவற்றையும் வானதூதர் மரியாளிடம் நேருக்கு நேராக சொல்கின்றார். மரியாள் வானதூதரின் வார்த்தைகளை நம்புகின்றார். 'ஆம்' என்று பதில் தருகின்றார்.
ஆனால், திருமுழுக்கு யோவானிடம் கடவுளின் தூதர் நேருக்கு நேராகப் பேசவில்லை. அவருக்குச் சொல்லப்பட்டதெல்லாம் அவரின் தந்தை சக்கரியாவின் சொற்கள்தாம். ஆக, அப்பாவின் சொற்களையே - அதாவது, இடையில் நிற்கும் ஒரு மனிதரின் சொற்களையே - வானதூதரின் அல்லது கடவுளின் சொற்களாக எடுத்து தன் வார்த்தையினால் அல்ல, தன் வாழ்வினால், 'ஆம்' என்று பதில் தருகிறார் திருமுழுக்கு யோவான். இந்த விஷயத்தில் அவர் மரியாளையும் மிஞ்சிவிடுகிறார். ஆக, 'பெண்களுக்குள் பேறுபெற்றவள்' என்று எலிசபெத்தால் அழைக்கப்பட்ட மரியாளைவிட, 'மனிதருள் பிறந்த அனைவரிலும் பேறுபெற்றவர்' திருமுழுக்கு யோவான் என்று இயேசுவால் சான்றளிக்கப்படுகின்றார்.

ஆக, காது இருப்பது முக்கியமல்ல. மாறாக, காது வழியாக வருபவற்றை ஏற்றுக்கொள்ளும் மனம் வேண்டும். ஆக, நாம் காதால் கேட்கிறோம் என்று சொல்வதைவிட மனத்தால் தான் கேட்கின்றோம். நாம் எதை விரும்புகின்றோமோ அதுதான் நமக்குக் கேட்கிறது. அதுதான் நம் உள்ளத்தில் பதிகின்றது. உள்ளத்தில் பதியும் எதுவும் மாற்றத்தைக் கொண்டுவருகிறது.

அனைவரிலும் பெரியவர் திருமுழுக்கு யோவான் என்று சொல்கின்ற இயேசு தொடர்ந்து, 'விண்ணரசிலும் சிறியவர் அவரிலும் பெரியவர்' என்கிறார்.

பெரியவர் ஆவதற்கான ஒரே வழி - கேட்கும் செவியுடையவராக இருப்பது.
கேட்பது என்றால் 'ஆம்' என்று சொல்வது.
கேட்பது என்றால் 'கீழ்ப்படிவது'.
இறைவனின் குரலுக்கு 'ஆம்' என்று சொல்லும் அனைவரும் விண்ணரசில் பெரியவர்.
விண்ணரசில் சிறியவர் / பெரியவர் திருமுழுக்கு யோவானிலும் பெரியவர்.

3 comments:

  1. " இடையில் நிற்கும் ஒரு மனிதரான தன் தந்தையின் சொற்களையே கடவுளின் சொற்களாக எடுத்து,தன் வார்த்தையால் அல்ல; தன் வாழ்க்கையினால் "ஆம்!" என்று பதில் தருகிறார் திருமுழுக்கு யோவான் என்பதோடு விட்டுவிடாமல் "பெண்களுக்குள் பேறுபெற்றவர் என்று எலிசபெத்தால் அழைக்கப்பட்ட மரியாளை விட,மனிதராய்ப் பிறந்த அனைவரிலும் பெறுபெற்றவர் திருமுழுக்கு யோவான் என்று இயேசுவால் சான்றளிக்கப்படுகிறார்"... உண்மையே என்றாலும் இந்தக்கோணத்தில் அதாவது மரியாளுக்கு மேல் ஒரு படி திருமுழுக்கு யோவானை வைக்கக் கொஞ்சம் தைரியம் தேவைப்படுவதென்னவோ உண்மைதான். "உள்ளத்தில் பதியும் எதுவும் மாற்றத்தைக் கொண்டுவருகிறது; மற்றும் இறைவன் குரலுக்கு "ஆம்!" என்று சொல்லும் அனைவருமே விண்ணரசில் பெரியவர்" போன்ற கருத்துக்கள் இறைவருகைக்கு நம்மைத் தயார் செய்யவும்,மெருகூட்டவும் அழைக்கின்றன. அழைக்கும் தந்தையை இறைவன் தன் ஆசீரால் நிரப்புவாராக!!!!

    ReplyDelete
  2. then why did John ask this... " “Are you the one who is to come, or should we look for another?”" Mathew 11:3 - I need the answer Father..

    ReplyDelete
  3. I think that question is because of John's self-doubt. This self-doubt arises in us as well. How? After being a priest for almost 10 years I am constantly encountered with the question: 'Is the way I might have to choose? Or something else?' Though we say it is God who calls, or it is the will of God, when you are alone this question wakes up. John was no exception.

    ReplyDelete