Saturday, February 20, 2016

உடற்சாடல் பிண்ணனி

பக்தி இலக்கியங்களில் காணப்படும் ஒரு முக்கியமான கூறு உடலைச் சாடுவது.

எடுத்துக்காட்டாக, புனித அகுஸ்தினாரின் 'Confessions' நூலில், அவர் உடலை சாடுகின்றார். உடலைப் பாவத்தைத் தூண்டும் ஒரு காரணியாகவே பார்க்கின்றார்.

இந்தக் கூறு பட்டினத்தாரின் பாடல்களிலும் மேலோங்கி நிற்கிறது.

மனிதர்கள் தங்கள் மனத்தால் அல்லது சிந்தையால் தங்கள் உடலையும் கடந்துவிடுகிறார்கள். 'இது நான். இது என் உடல்' என அவர்களால் வேறுபடுத்திச் சொல்ல முடிகிறது.

'காலையில் மலசலத்தால் துன்பம்
கட்டுச்சியில் பசிதாகத்தால் துன்பம்
மாலையில் துயில் காமத்தால் துன்பம்'

என உடல் துன்பத்திற்குக் காரணமாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

பட்டினத்தார் உடலால் வரும் துன்பத்தைச் சுட்டிக்காட்டிவிட்டு, அந்த உடலால் நாம் பெறும் பயன்களைச் சுட்டிக்காட்ட மறுத்துவிடுகிறார்.

உடல் நம்மை மற்றவர்களுக்கு காட்டும் ஒரு வெளிப்பாடு.

நாம் பேசுவதும், வேலை செய்வதும், உறவாடுவதும் இந்த உடலின்வழியாக மட்டுமே சாத்தியம்.


1 comment:

  1. சில வரிகளில் பல விஷயங்களை, அதிலும் வாழ்வின் அஸ்திவாரத்திற்கொத்த விஷயங்களை ஸ்கேன் பண்ணிச் சொல்வது போன்றதொரு பதிவு. என்னதான் இந்த உடல் நம்மைப் பாவத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு கருவியாகப்பார்க்கப்பட்டாலும் நம்மை சக மனிதனுக்கு அடையாளம் காட்டுவது இந்த உடல்தானே! இந்த அநித்திய உடலையும் அது போகின்ற போக்கில் விடாமல் கடிவாளம் போட்டுக் காக்கும் போது மனிதனும் தெய்வத்திற்கு சம்மாகிறான்.இதைத்தான் 'யோக நிலை' என்று மதங்களும்,அந்த உடல் மேல் ஆதிக்கம் பெற்ற பட்டினத்தார் போன்றோரும் சொல்கிறார்கள். திருச்சபையின் தூண்களில் ஒருவர் எனப் போற்றப்படும் புனித அகுஸ்தினார் கூட தன் உடல் சொல்லும் வழியெல்லாம் போனபின்பு தான் அவ்வுடல் மேல் ஆதிக்கம் பெற்றவர். ஆனால் அதே உடல்தானே உயிரின் வெளிப்பாடாக, உறவின் பிரதிபலிப்பாக நம்மைப் பிறரோடு இணையச் செய்கிறது.அவர் சாயலில் படைத்த எதுவுமே நாம் பயன்படுத்தும் முறையினாலன்றித் தன்னிலையே தப்பான ஒன்றாய் இருக்க முடியாது.இருதினங்களுக்கு முன் படித்தது....இங்கே குறிப்பிடுவது பொருத்தமாய் இருக்குமென நினைக்கிறேன்." காலையில் மலச்சிக்கலும்,மாலையில் மனச்சிக்கலும் இல்லாதவனே பேறு பெற்றவன்" நாம் எந்த வகை ..??யோசிப்போம்.தோபித்தைப்பற்றிய திரைப்படத்துக்கு ஊடே வரும் இடைவேளை போல ஒரு வித்தியாசமான,யோசிக்கவைக்கும் கருத்தைச் சொல்லிய தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete