Wednesday, February 3, 2016

அருளும், ஆனந்தமும்

கடந்த வாரம் பட்டினத்தார் தன் தாயாரின் இறுதிச் சடங்கில் பாடிய பாடலைப் பற்றிய பதிவிற்கு பின்னூட்டம் எழுதிய நண்பர் பெர்னார்ட் அவர்கள் நம் நாட்டிற்கு மறைப்பணிக்காக வந்த அருட்பணியாளர்களைப் பற்றி எழுதி, அவர்கள் தங்கள் குடும்பங்களில் உறவுகளை இழந்த செய்தியை கேள்விப்பட்டிருக்கக் கூட முடியாத சூழலில் இருந்தார்கள் என குறிப்பிட்டிருந்தார்கள்.
அதை வாசித்த அன்று உடனடியாக என் நினைவிற்கு வந்தது புனிதர் ஜான் தி பிரிட்டோ தான்.

அருளும், ஆனந்தமும் கொண்ட இவர் பெயரை தமிழ்கூறும் நல்லுலகம் அருளானந்தர் என அழைத்து மகிழ்கிறது.

நாளை அவரின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.

சீடர்களை பணிக்கு அனுப்பும் நாளைய நற்செய்தி பகுதி (மாற்கு 6:7-13) திருநாளோடு நன்றாக பொருந்துகிறது.

ஆங்கிலத்தில் 'படகுகளை எரித்தல்' (to burn one's boats) என்ற ஒரு சொலவடை உண்டு.

இது உருவான கதையாடல்கள் நிறைய உண்டு.

ஆனால் கான்செப்ட் இதுதான். ஒரு நாட்டு அரசன் இன்னொரு நாட்டின்மேல் படையெடுத்து செல்கிறான். வழியில் ஒரு பெரிய ஆறு. ஆற்றைக் கடக்க வேண்டும் என்றால் படகுகள் செய்ய வேண்டும். படகுகள் செய்து ஆற்றைக் கடக்கும் வேளையில் ஒரு சிலர் தாங்கள் எதிரி நாட்டைப் பற்றி கேள்வியுற்றதை வைத்து, தங்கள் பயணம் கடினமாக இருக்கும் எனவும், தாங்கள் அழிந்துவிடுவோம் எனவும் புலம்புகின்றனர். இதை காற்று வாக்கில் கேள்விப்படும் அரசன் அக்கரையை அடைந்தவுடன் எல்லா படகுகளையும் எரித்துவிட உத்தரவிடுகிறான். உத்தரவிட்ட கையோடு வீரர்களைப் பார்த்து, 'வீரர்களே! நாம் வந்த படகுகளை எரித்தாயிற்று. இனி நாம் திரும்பிச் செல்ல வழியே இல்லை. வாழ்வா? சாவா? என்ற இந்த போராட்டத்தில் நாம் எதிரிகளை வெல்வதைத் தவிர வேறு வழியில்லை.' என்கிறார். படை வெல்கிறது.

'படகுகளை எரித்தல்' என்பதை புதிய வாழ்க்கையைத் தொடங்குதல் என்றும் பொருள் கொள்ளலாம். உதாரணத்திற்கு, நான் செய்கின்ற ஒரு தொழிலில் அதிக நஷ்டம் ஏற்பட, அதை நான் அப்படியே விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு மாறும்போது, நான் என் பழைய 'படகுகளை எரிக்கிறேன்.'

படகு என்பது பாதுகாப்பு.

இந்த பாதுகாப்பை இழக்க அழைப்பு விடுக்கின்றான் அரசன்.

தன் சீடர்களை பணிக்கு அனுப்பும்போதும், அவர்கள் வைத்திருந்த பணம், தடி, மிதியடி, அங்கி போன்ற படகுகளை எரித்துவிடக் கட்டளையிடுகின்றார். பழையவற்றைப் பற்றிக் கொண்டிருந்தால் ஒருவேளை புதியவற்றில் அவர்களுக்கு நாட்டம் இருக்காது என்பதற்காகவே இப்படி செய்யச் சொல்கின்றார்.

அருளானந்தர் நம் தாய்மண்ணில் காலடி வைத்தபோது தன் பாதுகாப்புகளை விடுத்துவிட்டு, புதிய மொழி, புதிய கலாச்சாரம், புதிய உணவுப் பழக்கம் என புதியவற்றை தழுவிக்கொண்டார்.

'எங்கள் ஊரில் அப்படியாக்கும்,' 'எங்கள் ஊரில் இப்படியாக்கும்' என அக்கரைக்கு நடப்பவற்றைப் பற்றிப் பேசாமல், இக்கரையில் தான் செய்ய வேண்டியதைப் பற்றி யோசிக்கின்றார்.

படகுகளை எரிப்பதே உச்சகட்ட மனக்கட்டின்மை!

3 comments:

  1. 'புனித அருளானந்தர்'....பழைய இராமனாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த அநேகம் கிறித்துவக்குடும்பங்களுக்கு இவர்தான் பாதுகாவலர்.வீட்டுக்கு வீடு ஒரு 'பிரிட்டோ' இருப்பதைக் காணலாம்.இன்று இவரைப்பற்றிக் கூறும் தந்தை அதன் பின் புலமாகத்தரும் ' படகை எரித்தல்' எனும் சொலவடை அநேகம் அர்த்தங்களைத் தருகிறது.பாதுகாப்புத் தரும் 'படகை' எரிப்பது என்பது சாதாரண விஷயமில்லை.அப்படி இருந்தும் அதைச் செய்ய அழைக்கப்படுகிறோம் எனில் நம்மைப் பின்னுக்கு இழுக்கும் பழைய சம்பிரதாயங்களை விடுத்து நம்மை முன்னோக்கிச் செல்ல வைக்கும் புதிய விஷயங்களைத் தழுவிக் கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணமாகத்தான் இருக்க முடியும்.அருளுக்கும்,ஆனந்தத்திற்கும் சொந்தக்கார்ரான இந்தப்புனிதரின் விழாவைக் கொண்டாடும் இந்நாளில் இவர் வாழ்ந்த மண்ணில் சாதியின் பெயரால் நடக்கும் அனைத்து அட்டூழியங்களையும் முடிவுக்குக் கொணர்ந்து, மக்கள் ஒரே தேவனின் குழந்தைகளாக அருளோடும்,ஆனந்தத்தோடும் வாழும் வரம் கேட்போம். நல்ல கருத்துள்ளதொரு பதிவைத் தந்த தந்தைக்கு நன்றி.அனைவருக்கும் அதிலும் முக்கியமாக மதுரை,சிவகங்கை மறைமாவட்ட மக்களுக்குத் திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. GITANJALI A BERNARD, CHENNAI

    Your intellectual ballet is just astounding!
    And I enjoy it, pivoting on so many bases:
    “The win or lose” story attributed to Alexander the Great,
    his vast armies,
    the Persian shores,
    the burning of so many boats,
    the succinct summary of what a boat means,
    the perfect catch of so many fish-lessons you have netted for me from “the burnt boats”,
    St John de Britto,
    the countless requisites of a missionary of Christ…

    I am still digesting the nuances of the life and work of perhaps the first Jesuit martyr JOAO DE BRITO [that is his original name] in Madurai Mission.

    John de Britto was born into a Portuguese aristocratic family.
    His father – Salvador de Brito Pereira - served as Viceroy in Brazil.

    A student of both the reputed University of Coimbra and St Paul’s College in Goa, the Jesuit de Britto [1662] felt a calling to work among the Tamils of Marava Kingdom, Tamilnadu.
    After his first imprisonment there in 1684, he returned to Portugal in 1687.
    Although King Pedro wanted him to stay back in Lisbon, he declined the royal offer.
    He refused yet another invitation to be the Archbishop of Cranganore [Kodungallor, Kerala].

    Writing on St John de Britto, one author records in Portuguese, “se absteve até á morte de carnes, de ovos, de peixe, e de vinho, contentando-se com legumes, hervas e frutas”.
    I suppose that sentence translates into, “he abstained from meat, eggs, fish and alcohol/wine, and limited himself on legumes, fruits and herbs’ till his death”.

    You blog says that “BOAT” stands for security.

    Just a thought about the many who come to Indian Missions – to preach Christ.
    It looks as though they are in their “old boats” still – anchored in the port of arrival - and have not stepped out yet.
    On their back with so much of luggage, old carry-on, things that belong to the other shore.

    Missionaries in India who continue to import entire Western [not exactly Christian!] lifestyles - their forks, spoons, cutleries, crockeries, languages, dress codes, time schedules, prayer halls and prayer shawls, art forms and architecture, worship modes and so much more.
    Indeed men and women in their boats, just emotionally and existentially stuck in the harbor, even as they are actually parading on the ground...

    ReplyDelete
  3. Dear Father,Very good thought on "அருளும், ஆனந்தமும்".It inspired me a lot.Congrats.Happy Feast to you.

    ReplyDelete