இரண்டையும் வளரவிடுங்கள்
விண்ணரசு பற்றிய இன்னொரு உவமையைத் தருகின்றார் இயேசு. நல்ல விதைகள் விதைக்கப்பட்டு வளர்கின்றன. பகைவன் இரவில் களைகளை விதைக்கின்றான். களைகளைக் பறிக்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றார் தலைவர்.
இந்த உலகில் நன்மையும் தீமையும் ஒருங்கே இருப்பது ஏன்? என்பது நம் கேள்வி.
களைகளும் கோதுமையும் ஒருங்கே வளரட்டும் என்கிறார் தலைவர்.
பொறுமை காத்தால் மட்டும் களைகள் கோதுமையாகிவிடுமா? இல்லை.
களைகள் கோதுமைக்கான தண்ணீரையும், ஊட்டத்தையும் எடுத்துக்கொள்கின்றன. மேலும், இடத்தை அடைத்துக்கொண்டிருப்பதால் கோதுமையின் வளர்ச்சியையும் அவை தடுக்கின்றன.
இருந்தாலும், தலைவர் பொறுமை காக்கின்றார்.
எதற்காக? தவறுதலாக ஒரு கோதுமையும் களையப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக.
ஆக, நன்மையானவற்றின்மேல் கடவுள் காட்டுகின்ற பரிவு இங்கே வெளிப்படுகிறது.
மேலும், களைகள் இறுதி வரை களைகளாகவே இருக்கின்றன.
ஆனால், நாம் மாற முடியும்.
கடவுளின் காத்திருத்தலும் பொறுமையும் நம் மாற்றத்திற்கான காலக்கெடு என நாம் எடுத்துக்கொள்ள முடியும்.
நம்மைச் சுற்றி நடக்கும் தீமை கண்டு பரபரக்க வேண்டாம் தலைவருடைய பணியாளர்கள் போல!
உரிமையாளனே அமைதியாக உறங்குகிறான்.
ஊழியக்காரர்கள் நாம் ஏன் கூச்சல் போட வேண்டும்?
நிலம் அவனுடையது. அவன் பார்த்துக்கொள்வான்.
இறைவனின் படைப்பில் இயற்கையான விஷயங்கள் நல்லதும் தீயதுமாக இணைந்தே நடைபோட, அவற்றைப் பார்த்து பதற்றப்படவோ இல்லை எரிச்சல் படவோ மனிதனுக்கு எந்த அருகதையுமில்லை என எடுத்துரைக்கும் ஒரு பதிவு.
ReplyDeleteகளையுடன் சேர்ந்து ஒரு கோதுமை கூட களையப்பட்டுவிடக்கூடாது என்ற பரிவின் உச்சம் இறைவனிடத்தில். நானே பொறுமை காக்கயில் உனக்கென்ன அவசரம்? என்கிறார் பயிர்களுக்குச் சொந்தக்காரர்.
அடுத்து வருகின்றன கவித்துவமான தந்தையின் வார்த்தைகள்!
“உரிமையாளனே அமைதியாக உறங்குகிறான்.
ஊழியக்காரர்கள் நாம் ஏன் கூச்சல் போட வேண்டும்?
நிலம் அவனுடையது.அவன் பார்த்துக்கொள்வான்.”
களையும்,கோதுமையும் இணைந்து இருப்பதே வாழ்வின் இசைவு ( harmony) என்ற உண்மையை உணர்த்தும் பதிவிற்காகத் தந்தைக்கு வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!!