Sunday, July 11, 2021

ஆண்டவரின் பெயரே

இன்றைய (12 ஜூலை 2021) நற்செய்தி (மத் 10:34-11:1)

ஆண்டவரின் பெயரே

இன்றைய பதிலுரைப்பாடல் (காண். திபா 124), 'ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே!' என்ற மிக அழகான வாக்கியத்தைக் கொண்டிருக்கிறது.

போர் மற்றும் இயற்கைச் சூழலில் தங்களுக்குத் துணை என்று யாரும் இல்லாத சூழலில், 'ஆண்டவரின் பெயரே' தங்களுக்குத் துணை என்று இஸ்ரயேல் மக்கள் நம்பினர். இதை நாம் இரண்டு நிலைகளில் புரிந்துகொள்ளலாம். ஒன்று, 'ஆண்டவரின் பெயர்' எருசலேம் ஆலயத்தில் குடியிருந்தது என்று இஸ்ரயேல் மக்கள் நம்பினர். இரண்டு, ஒருவரின் பெயர் என்பது அவருடைய உடனிருப்பைக் காட்டுகிறது.

நற்செய்தி வாசகத்தில், தன் பெயரின் பொருட்டு சீடர் ஒருவரின் உள்ளத்திலும் இல்லத்திலும் ஏற்படும் தாக்கத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றார் இயேசு. மேலும், இதன் பின்புலத்தில் சீடத்துவத்திற்கான பாடங்களையும் முன்வைக்கின்றார்: (அ) இயேசுவை முதன்மையானதாக் தெரிந்துகொள்ள வேண்டும். (ஆ) தன் சிலுவையைச் சுமக்க வேண்டும். (இ) தன் உயிரை இழக்கத் துணிய வேண்டும்.

முதல் வாசகத்தில், யோசேப்பை அறிந்திராத பாரவோன் ஒருவர் எழுந்து இஸ்ரயேல் மக்களை ஒடுக்க முயற்சி செய்கின்றார்: (அ) கடும் வேலையைக் கொடுக்கின்றார். (ஆ) கொடுமைப்படுத்துகின்றார். இதனால் அவர்களின் வாழ்வு கசந்துபோகும்படி செய்கின்றார். (இ) குழந்தைகளை நைல் நதியில் எரிந்துவிடுமாறு சொல்கின்றார்.

ஒட்டுமொத்தமாக ஆண்டவரின் பெயரே துணையாக இருக்கிறது.

1 comment:

  1. “ ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!” நம்பிக்கையின் உச்சகட்டம் என்றாலும் கூட ஒருவருக்கு அவரின் பெயரும் கூட அவரது உடனிருப்பைக் காட்டுகிறது என்பதும் உண்மையே! இயேசுவின் பெயரைத்துணையாக ஏற்கும் எவரும் அவரின் பெயரைத்தெரிந்து கொண்டால் மட்டும் போதாது…அவரின் சிலுவையை சுமக்கவும், அவருக்காக உயிரை இழக்கவும் துணிய வேண்டும் என்கின்றன இன்றைய வாசகங்கள்.

    நாம் அறிவு தெளிந்த நிலையில் இருக்கும் போது மட்டுமல்ல…. பாரவோன் போன்ற பல சிக்கல்கள் நம்மை நோக்கிப்படையெடுக்கையிலும் நமக்குத் துணை நிற்பது “ஆண்டவரின் பெயரே!” கடவுளே இயேசுவின் பெயரை எப்பெயருக்கும் மேலானதாகப் பிரகடனப்படுத்தியிருக்கையில் நமக்கென்ன தயக்கம் அவரின் பெயரை கூவியழைக்க?

    “ஆண்டவரே! நான் நலிந்து போன நேரங்களில் எனக்குத் துணையாக வாரும்!”
    கூவியழைக்க குரல் கொடுத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete