மனம் மாறவில்லை
தன் போதனைகளைக் கேட்டு, வல்ல செயல்களைக் கண்டு மனம் மாறாத நகரங்களை இயேசு சபிக்கின்றார். 'ஐயோ! கேடு!' என்று இயேசு சாபமிடுதல் நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
'பகைவருக்கும் அன்பு' என்று கற்பித்த இயேசு எப்படி சாபம் கொடுக்க முடியும்? என்ற கேள்வியும் எழுகின்றது.
கொராசின் மற்றும் கப்பர்நாகூம் நகரங்கள் மனம் மாறாமல் இருக்கக் காரணங்கள் மூன்று என்று குறிப்பிடலாம்: (அ) தங்களுடைய பழைய வாழ்க்கை போதும் என்ற மனநிலையில் இருந்திருப்பார்கள். (ஆ) புதியது பழையதை விட ஈர்ப்பானதாகத் தோன்றாமல் இருந்திருக்கும். (இ) தன் கவனத்தை தன் வளர்ச்சியின்மேல் மட்டும் காட்டியிருப்பார்கள்.
இயேசுவின் போதனை அனைவரையும் மனமாற்றத்திற்கு அழைக்கிறது. மனமாற்றம் நடைபெறாதபோது இயேசுவின் சாபம் நம்மேல் விழுகிறது. அவருடைய சாபம் நமக்கு அவர் விடுக்கும் எச்சரிக்கையே அன்றி, நம்மேல் அவர் இடும் கண்டனம் அல்ல.
இன்றைய முதல் வாசகத்தில் மோசே வியத்தகு முறையில் காப்பாற்றப்படுவதையும், அவர் தன் இனத்தாருக்கு எதிராகக் குரல் எழுப்புவதையும் வாசிக்கின்றோம். தன் பாரவோனின் அரண்மனையில் வளர்ந்தாலும் தன் மனத்தை தன் இனத்தின்மேலேயே பதிய வைக்கின்றார் மோசே.
Jesus' message calls for transformation.🙏
ReplyDeleteஉண்மைதான்…. பிள்ளைகள் தவறு செய்யும் போது மனம் புழுங்கி அழுத்தமான வார்த்தைகளால் திட்டும் பெற்றோர்…..அது அவர்கள் பிள்ளைகள் செய்த தவறின் மேல் உள்ள கோபம் மற்றும் அவர்கள் அத்தவறைத் திரும்ப செய்யக்கூடாது எனும் நல்லெண்ணத்தின்….அக்கறையின் வெளிப்பாடேயன்றி, அவ்வார்த்தைகள் அவர்களின்
ReplyDeleteஅடிமனத்திலிருந்து வருவதில்லை; அவை எந்த விதத்திலும் அவர்களை நோக்கி விடுக்கும் சாபமாகாது. பெற்றோரின் வார்த்தைகளே அப்படியெனில்,இயேசுவின் வார்த்தைகள் எப்படி வேறுவிதமாக இருக்க முடியும்?
“ மோசே” பற்றி என்ன சொல்வது? “ ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் ஒரு கண் வையடா” எனும் முதுமொழிக்கு ஏற்றார் போல் தன் வாழ்நாளின் மொத்த நாட்களையும் தான் சார்ந்திருந்த மக்களுக்காகவே அர்ப்பணித்தவர்.வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு தன் மக்களை இட்டுச்சல்ல முயன்றும்,தன் நிறைவேறாத ஆசையோடு இறைவனடி சேர்ந்தவர் என்பது நம் கண்களைப் பனிக்கச்செய்யும் விஷயம்.
இன்றையப் பதிவின் புதிய ஏற்பாட்டு இயேசுவும்…பழைய ஏற்பாட்டு மோசேயும் நம்மை நேர்கோட்டில் இட்டுச்செல்லும் வழிகாட்டிகளேயன்றி, நமக்குக் கெடுபிடி காட்டும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் அல்ல….. என்று உணர்த்த வரும் தந்தைக்கு என் நன்றிகள்!!!