Tuesday, February 9, 2021

மனிதருக்கு உள்ளேயிருந்து

இன்றைய (10 பிப்ரவரி 2021) நற்செய்தி (மாற் 7:14-23)

மனிதருக்கு உள்ளேயிருந்து

'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்பது புறநானூற்று வாக்கு.

அதாவது, நன்மையும் தீமையும் நமக்கு உள்ளிருந்து வருகின்றனவே தவிர, நமக்கு வெளியே இருந்து வருவதில்லை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் சீடர்களிடம், 'வெளியிலிருந்து வரும் எதுவும் நம்மைத் தீட்டாக்குவதில்லை' என்று சொல்வதோடு, மனித உள்ளத்திலிருந்து வெளிவருகின்ற தீமைகளைப் பட்டியலிடுகின்றார்.

இதையே நீதிமொழிகள் நூல் ஆசிரியர், 'விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய். ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதி செய்யும்' (காண். நீமொ 4:23) என்கிறார். 

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் தன் உயிர் மூச்சை மனிதருக்குள் ஊதுகின்றார். இங்கே ஒரு புரிதல் சிக்கல் எழுகிறது. ஆண்டவராகிய கடவுள் தன் உயிர் மூச்சை மனிதருக்குக் கொடுக்கிறார் என்றால், மனிதரின் உள்ளே இருப்பது அவருடைய மூச்சுதானே. அப்படி இருக்க, அங்கிருந்து தீமை ஊற்றெடுப்பது எப்படி?

இதற்கான விடையை முதல் வாசகத்தின் இறுதிப் பகுதி நமக்குத் தருகிறது.

ஆண்டவராகிய கடவுள் மனிதருக்கு விருப்புரிமையைத் தருகின்றார். 'விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்ணக் கூடாது' என்ற எச்சரிக்கையை அவர் வழங்கினாலும், உண்பதற்கான வாய்ப்பு இருப்பதை உறுதி செய்கின்றார். அங்கேதான் மனிதர்கள் தங்கள் விருப்புரிமையைச் செயல்படுத்துகின்றனர்.

இன்று நம் உள்ளத்தை விழித்திருந்து காவல் காத்தல் நலம்.

அங்கிருந்தே அனைத்தும் ஊற்றெடுக்கின்றன. நம்மில் இருப்பது கடவுளின் ஆவிதாம். ஆனால், நம் தெரிவுகளே நம்மை இயக்குகின்றன.

3 comments:

  1. இன்று நம் உள்ளத்தை விழித்திருந்து காவல் காத்தல் நலம்.

    நம்மில் இருப்பது கடவுளின் ஆவிதாம். ஆனால், நம் தெரிவுகளே நம்மை இயக்குகின்றன.

    வாழ்விற்கான வழிதனை,சரியான நேரத்தில்,மிகச் சரியாக எடுத்தியம்பி வழிநடத்துகின்ற அருட்பணி . யேசுவுக்கு,
    ஆழமான,அழுத்தமான நன்றிகள்🙏

    ReplyDelete
  2. இறைதந்தை,அப்படியே,இயேசு மாதிரி தெரிகிறாரே🤔

    ReplyDelete
  3. “ஆண்டவராகிய கடவுள் தன் உயிர் மூச்சை மனிதருக்குக் கொடுக்கிறார் என்றால், மனிதரின் உள்ளே இருப்பது அவரின் மூச்சுதானே. அப்படி இருக்க,அங்கிருந்து தீமை ஊற்றெடுப்பது எப்படி?” கேள்வியின் நாயகனே பதிலையும் தருகிறார். மனிதர்கள் தங்கள் ‘விருப்புரிமையை’ செயல்படுத்த அனுமதிக்கிறார்.

    நம்மில் இருப்பது கடவுளின் ஆவிதாம் எனினும் நம் தெரிவுகளே நம்மை இயக்குகின்றன.....அப்படியெனில் “ நம் உள்ளத்தை விழித்திருந்து காவல் காத்தல் நலமன்றோ!”

    “ தீதும் நன்றும் பிறர் தரவாரா”..... நம்முள் இருப்பதையும்,நமக்குள் நுழைவதையும் அறுதியிட்டுக்கூறும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete