Thursday, February 25, 2021

விரைவாக உடன்பாடு

இன்றைய (26 பிப்ரவரி 2021) நற்செய்தி (மத் 5:20-26)

விரைவாக உடன்பாடு

இன்றைய நற்செய்திப் பகுதியில், 'கொலை செய்யாதே!' என்னும் கட்டளை பற்றிப் பேசுகின்ற இயேசு, கொலையின் தொடக்கமான கோபத்தைக் கட்டுக்குள் வைக்கச் சொல்கின்றார்.

மேலும், பிறரன்பில் நாம் எதிர்கொள்கின்ற மனத்தாங்கல், பகைமை உணர்வு பற்றியும் அறிவுறுத்துகின்றார்.

'எதிரியுடன் உடன்பாடு செய்துகொள்வது' பற்றிப் பேசுகின்ற இயேசு விரைவாக அதைச் செய்யுமாறு பணிக்கின்றார். இயேசுவின் சமகாலத்தில் நிலவிய நீதித்துறையின் போக்கு எப்படி இருந்தது என்பதை இங்கு நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் எசேக்கியேல் இறைவாக்கினர் வழியாகக் கடவுள் உடனடி மனமாற்றத்துக்கு மக்களை அழைக்கின்றார்.

1 comment:

  1. “ கோபம்”.... மோசமான வியாதி. அப்படி அந்த வியாதி வந்திடின் சூரியன் கீழே இறங்குமுன் சமரசம் செய்ய வேண்டுமென அழைப்பு விடுக்கிறது விவிலியம்.அப்படி இல்லையேல் அது எல்லை தாண்டி கொலை வரைக்கும் கூட ஒருவரைக் கொண்டு செல்லலாம். நம் ‘பிறரன்பில்’ மனத்தாங்கல், பகைமை உணர்வு போன்ற எதிர்மறை விஷயங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது இன்றையப்பதிவு.’ எதிரியுடன் உடன்பாடு செய்வது மட்டுமின்றி அதை விரைவாகவும் செய்யப் பணிக்கிறார் இயேசு. இந்த தவக்காலத்தில் அதை செய்து பார்க்கலாமே! நல்லதொரு அறிவுரையைச் சுமந்துவரும் பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete