Thursday, February 4, 2021

மிகக் குழப்பமுற்றாலும்

இன்றைய (5 பிப்ரவரி 2021) நற்செய்தி (மாற் 6:14-29)

மிகக் குழப்பமுற்றாலும்

'அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்' - திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளைக் கேட்கும் ஏரோது மதில் மேல் பூனையாய் நிற்கும் நிலையை இந்த அருள்வாக்கியம் எடுத்துச் சொல்லுகிறது.

தான் செய்வது சரியா அல்லது தவறா என்ற குழப்பம் ஏரோதுவுக்கு எழுகிறது. 

தான் செய்வது சரி என்று சொல்லி முன்னால் செல்லவும் முடியவில்லை. தான் செய்வது தவறு என்று ஏற்று அச்செயலை விடவும் இல்லை.

ஒரு வண்டியை இயக்கினால் நாம் ஒன்று முன்னே செல்ல வேண்டும். இல்லை என்றால் பின்னே செல்ல வேண்டும். முன்னேயும் பின்னேயும் ஒரே நேரத்தில் வாகனத்தை இயக்க முயன்றால் நாம் தொடங்கிய இடத்தில் அப்படியேதான் இருப்போம்.

பாவம் ஏரோது! அவரும் அந்த நிலையில்தான் இருக்கின்றார். 

அப்படி அவர் இருந்ததால்,

(அ) ஒரு குழந்தையின் குரலுக்குச் செவிகொடுக்கின்றார், தன்சிந்தனை மறக்கின்றார்.

(ஆ) மகிழ்ச்சியின் உச்சகட்டத்தில் தன்னையறியாமல் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றார்.

(இ) அனைவரையும் - ஏரோதியாவை, அவருடைய மகளை, மற்றும் விருந்தினர்களை - மகிழ்விக்க எண்ணுகிறார்.

எல்லாரையும் மகிழ்விக்க நினைத்த ஏரோதுவை மகிழ்விக்க இறுதியில் யாருமில்லை.

அவரோடு பேசி அவருடைய நலம் விரும்பிய திருமுழுக்கு யோவானும் கொல்லப்பட்டுவிட்டார்.

'அனைவரையும் மகிழ்விக்க விரும்புபவர் ஐஸ்க்ரீம் விற்பவர் மட்டுமே' என்பது ஸ்டீவ் ஜாப்ஸின் வார்த்தைகள்.

இன்று நம் வாழ்வில் மிகக் குழப்பமாக இருக்கும் சூழல் எது?

முன்னும் செல்லாமல் பின்னும் செல்லாமல் நாம் இருக்குமாறு நம்மைத் தடுக்கி வைப்பது எது?

5 comments:

  1. நிதர்சனமான வார்த்தைகள்…...
    நன்றி...

    இறைவனை மகிழ்விப்பதாக மட்டுமே நம் செயல்கள் அமையவேண்டும்.

    Lord, give us that strength.🙏

    ReplyDelete
  2. “ அனைவரையும் மகிழ்விக்க விரும்புவர் ஐஸ்க்ரீம் தான் விற்க வேண்டும்”... என்ற நிலையாகிவிட்டது ஏரோதின் நிலை. மனம் நிறைய திருமுழுக்கு யோவான் மேல் மரியாதை இருந்தும்,அவன் நாநுனி யிலிருத்த சனி அவனை மேற்கொண்டு விட்டது. ஒரு தப்பு செய்யவும் தைரியம் வேண்டும்.அதுகூட அவனுக்கில்லை. சமரசங்கள் எப்பொழுதுமே கொகொடுப்பதில்லை. ஏரோது நிலையும் அதுதான், இருதலைக்கொள்ளி பாம்பின் நிலையே அவனது.

    ஏதோ ஒன்றுக்காக ஒன்றை விட்டுக்கொடுத்தேயாக வேண்டும்.ஆனால் அது எது? நம் வாழ்வின் குழப்பமான நேரங்களிலும் உண்மைக்கு பயந்து பொய்க்கு பூஜை செய்கிறோம்.” அதுவும் வேண்டும்; இதுவும் வேண்டும்” எனில் ஒன்றுமே இல்லாத நிலையில் தான் முடியும் ஏரோது போல.

    வாழ்க்கை நம்மைப் பலநேரங்களில் தள்ளிவிடும் சூழல் இது. யோசிப்போம்....ஐஸக்ரீம் கையிலிருக்கணுமா? இல்லை வாயிலிருக்கணுமா என்று! நாம் அன்றாடம் தள்ளப்படும் சூழ்நிலை. முடிவெடுக்க உதவிசெய்யும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  3. Super reflections Yesu

    ReplyDelete